உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

❖ 21❖ மறைமலையம் – 21

கடவுள் நிலையை மாணிக்கவாசகப் பெருமான் நன்கு விரித்து விளக்கியிருக்கின்றா ராதலின், இச்செய்யுட் சொற்பொருளை ஒவ்வொன்றாய் ஆராய்ந்து பார்ப்பது நமக்குப் பெரிதும் பயன்படுமெனக் கருதி அவற்றை ஆராயப் புகுகின்றாம்.

முதலிற் ‘கேட்டாரு மறியாதான்’

என்னுஞ்

சாற்றொடர் ‘அறிவிற் சிறந்த எத்தகையினரை வினவியும் இறைவன் அறியப்படாதவன்' என்பதனை விளக்குகின்றது. இறைவனிருக் கும் ஊரேது, அவன் பேரேது, அவனைப் பெற்றார் யார்? அப் பெற்றோரின் பெயர் என்னை? என்று நாம் எவரை வினாவினாலும் அவரெல்லாம் அவற்றிற்கு விடை சால்ல மாட்டாமையின், வினாவியவர் அங்ஙன மெல்லாம் வினாவியும் அவனை அறிந்து கொள்ளாத நிலையிலேயே இருக்கின்றனர். இன்னுந் தவமுயற்சியிற் றேர்ந்த முனிவர்களுங் கூட இறைவன் இயல்புகளைக் கேட்டறியப் புகுந்து தமக்குமேல் நிற்கும் முனிவர்களைக் கேட்க, அவர்களும் அவற்றைத் தமக்குத் தெரியாது என்று தமக்கு மேற்பட்ட முனிவர்களைக் கேட்க, அவருந் தமக்குத் தெரியாது என்று தமக்கு மேற்பட்டாரைக் காட்டிக் கைவிட, இங்ஙனமே எவர் எவரைக் கேட்பினும் அவரெல்லாம் அவன்றன் முழுமுதற்றன்மைகளை எடுத்துக் காட்ட முடியாமல் வருந்தி நிற்றலின் ‘கேட்டாரு மறியாதான்' என்று முதற்கிளந் தோதினார்.

இனிக், 'கேடொன்றில்லான்' என்னுஞ் சொற்றொடர் றைவன் எக்காலத்தும் எத்தகைய அழிவும் எத்தகைய ஊறு பாடும் இல்லாதவன்' என்பதை அறிவுறுத்துகின்றது. அவன் ஒரு காலத்தில் இல்லாமலிருந்து பின்னையொரு காலத்துத் தோன்றினவனாய் இருப்பினன்றோ அவ்வாறு ஒருகாலத்துத் தோன்றினவன் பின்னே ஒரு காலத்து இறந்து கேடுறுவா னென்று கொள்ளல் வேண்டும். கடவுளுக்குத் தாய் தந்தை யாவார் யாவரென்று எவரைக் கேட்பினும் அவரெல்லாம் அவற்குத் தாய்தந்தையர் இலரென்றே சொல்லுதலால், எவராலும் அவன் பிறப்பைக் கேட்டறிய முடியாமையின் அவன் பிறவாதவன் என்பது தெளியப்படும். அவ்வாறு தெளியப் படவே அவனுக்கு இறப்பும் இல்லையென்பது தானே போதரும். எவ்வெவ்வுயிர் பிறக்கின்றனவோ அவையெல்லாம் இறக்கின்றன. பிறவி யெடுத்த உயிர்களுக்கே இறப்பும் நிகழக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/245&oldid=1587352" இலிருந்து மீள்விக்கப்பட்டது