உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா பழங்களைப் பறித்துண்டாற் குற்றமென்னை? ? குலை குலையாய்த் தொங்கும் இப்பழங்களிற் சிலவற்றை யான் பறித்துத் தின்றாலும் அதனை எவருமே கண்டுபிடிக்க முடியாது. ஆதலால், இவற்றிற் சில பழங்களை என் அவா அடங்கும்மட்டும் பறித்துத் தின்னக்கடவேன்' என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டு, ஒரு மரத்தின்மேலேறி ஒரு பழத்தைப் பறிக்கக் கைநீட்டினான். அந்நேரத்தில், தான் படித்த பள்ளிக்கூடத்துப் பாடத்திலிருந்து மீண்டுமோர் அறிவுரை நினைவுக்கு வந்தது. 'எவருங் காணவில்லை என்று பிறர்க்குரிய எதனையுந் திருடாதே, ஏனென்றால், எங்குமுள்ள கடவுள் நீசெய்யுந் திருட்டுச் தொழிலைப் பார்த்துக் கொண்டிருக் கின்றார்' என்பதே அவ்வறிவுரையாம். இது நினைவுக்கு வந்ததும் அச்சிறுவன் உளம் நடுநடுங்கி நீட்டின கையை மடக்கிக் கொண்டு, 'கடவுளே என் பிழையைப் பொறுக்க வேண்டும்' என்று சொல்லி வணங்கினவனாய் அத் திருட்டுத் தொழிலுக்குத் தப்பி நல்லவனாய் இல்லஞ் சேர்ந்தான். பார்மின்கள் அன்பர்களே! இவ் உண்மைக்கதையிற் கடவுள் நினைவினால் தீச்செயலுக்குத் தப்பி அச் சிறுவன் நல்லொழுக்கத்தில் நிலைபெற்றமைபோல, எல்லாம்வல்ல எங்குமுள்ள கடவுளை நினைந்தொழுகுவார்க்கே நல்லொழுக் கத்தில் நிலைநிற்றல் கைகூடுமென்பது பறப்படு கின்றதன்றோ?

இன்னும், மேனாட்டில் அரசாண்ட ஒரு மகமதிய மன்னன் காதலிற்சிறந்த தன் அழகிய மனைவிமேல் தானுங் காதல் கொள்ளாமல் தன்மனைவியின் றோழியான மற்றுஓர் அழகிய மாதின்மேல் மையல் கொண்டான். அந்த மாதோ மணமாகாத கன்னிப்பெண்ணாயினும்

அவள் அம் மன்னன் மேற் சிறிதுங் காதல் கொண்டிலள். அது தெரிந்தும், அவ்வரசன், அவள்மேல் ஆராத மையலுடையனாய் அவளை எப்படியாவது வலிந்து பற்றிப் புணர்வதற்குக் காலம் பார்த்திருந்தான். இப்படியிருக்க, ஒருநாள் அத் தோழிப்பெண் அவ்வரசன் இருந்த மாளிகையிற் சில ஒழுங்குகள் செய்வ தற்கு வந்து அவ் வேலையைச் செய்து கொண்டிருந்தாள். அப்போது அம் மாளிகையிலிருந்த மற்ற வேலைக்காரர் களெல்லாருந் தத்தம் வேலையைச் செய்து முடித்து விட்டு வெளியே போய் விட்டனர். அதனாலும், அத் தோழிப்பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/284&oldid=1587391" இலிருந்து மீள்விக்கப்பட்டது