உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

250

மறைமலையம் – 21

களிடத்தும் இரக்கமும் அன்பும் எமக்கு உண்டாகா; இ பேருண்மை யினைத் தெளிய உணர்ந்தே,

| 2

“ஈசனுக்கு அன்பில்லார் அடியவர்க்கு அன்பில்லார் எவ்உயிர்க்கும் அன்பில்லார் தமக்கும் அன்பில்லார் பேசுவதென் அறிவில்லாப் பிணங்களைநா மிணங்கில் பிறப்பினிலும் இறப்பினிலும் பிணங்கிடுவர் விடுநீ ஆசையொடும் அரனடியார் அடியாரை அடைந்திட்டு அவர்கருமம் உன்கரும மாகச் செய்து கூசிமொழிந்து அருண்ஞானக் குறியினின்று கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே.'

என்று அருணந்தி சிவனாரும் சிவஞானசித்தியாரில் அருளிச் செய்தார் என்க.

என்று இத்துணையும் விரித்து விளக்கியவாற்றால்,

மக்களாகிய நாம் கடவுளுணர்ச்சியுடை யராய் அக்

கடவுளிடத்து அன்பும் அச்சமும் உடையராய் ஒழுகினாலன்றி, நாம் நல்லொழுக்கத்திற் பிறழாது நிற்றல் இயலாதென்பது நன்கு பெறப்பட்டது. இதற்கு உண்மையாக நடந்த சில நிகழ்ச்சி களையும் இங்கு எடுத்துக் காட்டுவாம்:

ஒருகாற் பள்ளிக்கூடத்திற் கல்வி பயிலும் ஒரு சிறுவன் தன்னூர்க்குப் புறத்தேயுள்ள ஒரு மாந்தோப்பினுட் புகுந்தான். அப்போது, அங்குள்ள மாமரங்களில் தேனொழுகக் கனிந்த மாம்பழங்கள் குலைகுலையாய் தொங்கக் கண்டான்; கண்டதும், அவனுக்கு வாய் ஊறியது. ஆனாலும், அவன் தான் படித்த பள்ளிக்கூடப் பாடம் ஒன்றிற் “பிறர்க்குரிய பொருள் எதனையுந் திருடாதே" என்று கற்பிக்கப்பட்ட அறிவுரை அவனது நினை வுக்கு வந்தது. அந் நினைவு வந்ததும், அவன் இம் மாம்பழங்கள் பிறர்க்கு உரியன ஆகையால் இவற்றை நாம் திருடுதல் கூடாது என்று முதலில் எண்ணினான். ஆனாலும், அம் மாம்பழங்களிற் சிலவற்றைத் தின்னவேண்டும் என்னும் அவா அவனால் அடக்க முடியாமல் மேன்மேல் எழுந்தது.பிறகு நினைப்பான்: 'இத் தோப்பிற்கு உரியவர்கள் எவரையுங் காணேன். வேறு ஆட்கள் எவரும் இங்கு நடமாவுமில்லை. ஆதலால், யாருங்காணாத இந் நேரத்தில் யான் இவற்றிற் சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/283&oldid=1587390" இலிருந்து மீள்விக்கப்பட்டது