உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249

8. நல்லொழுக்கத்துக்குக் கடவுள் உணர்ச்சி இன்றியமையாமையும் அதற்குச்

சில எடுத்துக்காட்டுகளும்

எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வளவு மறைவான ஏற்பாடு களிலுந்தான் மறைக்கப்படாமல் நின்று, யாம் எண்ணும் எண்ணங்களையும் யாஞ் செய்யுங் செயல்களையும் எப்போதுங் கண்டு கொண்டு இருப்பானாகிய எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் ஒருவன் எங்குமுளன் என நினைந்து அவனுக்கு அஞ்சி னா லன்றி, யாம் நல்லொழுக்கத்தில் வழுவாமல் நிலை நிற்க மாட்டுவேமோ? எம்மால் அன்பு வைக்கப்படுவாரும் எம்பால் அன்பு வைப்பாரும், எம்மால் இன்பம் அடைவாரும் எனக்கு இன்பந் தருவாரும் ஆகிய எல்லாரும் பிணிப்பட்டும் வறுமை யுற்றும் மூத்தும் மடிந்தும் போக, யாம் துன்பத்துக்கே ஆளாகி உழல்கின்றோமாதலால், அங்ஙனம் எம்மனோரைப் போற் பிணிப்படாதும் வறுமை யுறாதும் மூவாதும் மடியாதும் நிற்கவல்ல ஒரு முழுமுதற் கடவுளால் அடையப்படும் அழியாத பேரின்பம் ஒன்று உண்டென்பதனை நினைந்து, அதனை எளியேமுக்குத் தரவல்ல அம் முதல்வன்பால் யாம் ஆரா அன்பு மீதூரப் பெற்றாலன்றி, யாம் நல்லொழுக்கத்தில் மாறாமல் நிற்க மாட்டுவேமோ? அன்பர்காள் ஆராய்ந்து சொன்மின்கள்! ஆகவே, சிற்றறிவுஞ் சிறு தொழிலுஞ் சிற்றின்பவேட்கையும் உடைய நிலையில்லா மக்கட் பிறப்பினேமாகிய யாம், எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் எல்லா முதன்மையும் எல்லா இன்பமும் ஒரு ன்பமும் ஒருங்குடைய ய ஆண்டவனுக்கு அஞ்சி அவன்பால் அன்பு பூண்டு ஒழுகினா லன்றி, எம்போன்ற மக்களிடத்தும் ஏனைச் சிற்றுயிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/282&oldid=1587389" இலிருந்து மீள்விக்கப்பட்டது