உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

மறைமலையம் – 21

அடக்குதற்குத் தக்கதொரு பெருந்துணை கிடைத்தாலன்றி, எவரும் நல்லொழுக்கத்தில் நிலை பெற நிற்றல் இயலாது.சேற்று நிலத்திற் செல்வோனுக்குத் தக்கதோர் ஊன்றுகோல் கிடைத்தா லன்றி, அவன் அதனைக் கடக்க மாட்டாதவாறு போலவும், கொடுநோய் கொண்டு வருந்துவோன் ஒருவனுக்கு விழுமிய மருந்தூட்டும் சிறந்த மருத்துவன் ஒருவன் றுணை யின்றி அவன் அந் நோயைத் தீர்த்துக் கொள்ள மாட்டாமை போலவுங், கொடு விலங்குகளும் பலவகை மரங்களு மடர்ந்த ஒரு கருங்காட்டினுள் வழிச்செல்வோனொருவனுக்கு அதன்கண் வழிகாட்டுவான் றுணையின்றி அவன் அதனைக் கடந்து செல்லல் இயலாமை போலவும், சிற்றின்பப் பொருள்கள் நிறைந்த இந் நிலவுலகின் கண் உயிர்வாழுஞ் சிற்றறிவுஞ் சிறுகிய ஆற்றலும் உடைய நம்ம னோர்க்குப், பேரின்பப் பொருளைக் காட்டுவான் ஒருவன் துணையின்றி நல்லொழுக்கத்தின்கண் நிலைநிற்றலும் இயலா

தாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/281&oldid=1587388" இலிருந்து மீள்விக்கப்பட்டது