உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

247

துணிகின்றனரா? ஒருசிறிதும் இல்லையே, அவர்பாற் பொருள் பெறவேண்டும் புலவர்களும் பிறரும் அவர் முன்னிலையிற் சென்று, அவர்தங் காலில் வீழ்ந்துவணங்கி அவரைப்புகழ்ந்து பாடியும் பேசியும் பாராட்டியல்லவோ வருகின்றனர்! கல்வியுங் கடவுளுணர்ச்சியும் வாய்ந்து உலகத்துக்கு நன்றாற்றும் நல்லோர் சிலர் செல்வமும் ஆள் வலியும் அரசியல் நிலையும் இலராயின், மேற் சொன்ன புலவரும் பிறரும் அந்நல்லோர்பாற் குற்றங் களைத் தேடியாராய்ந்து, சிறுகுறைகளிருந்தால் அவற்றைப் பெருங் குறைகளாக்கி வாய்ப்பறையறைந்து, அவர் தம்மைப்பழி தூற்றி அலகைகளாக வல்லவோ திரிகின்றனர்! இத்தன்மைய ராகிய மக்கள் நிறைந்த இவ்வுலகத்தில், வெறு நல்லொழுக் கத்தை மட்டும் எவ்வளவு தான் வற்புறுத்திப் பேசினாலும், அதனைக் கடைப்பிடித்து அந்நல்லொழுக்கத்தின்கண் உண்மை யாகவே நிற்பார் உளரா வரோ சொன்மின்கள்!

நல்லொழுக்கத்தான் வரும் நன்மை உடனே இன்பந் தருவதன்றாய் நீண்டகாலஞ் சென்று தனது அழியாப் பேற்றினை நல்குவதாயிருத்தலின், அதனை அளந்துபார்த்து, அவ்வழியி லொழுகுவார் மிக அரியராகவே இருக்கின்றனர். மற்றுத், தீயொழுக்கமோ தன் பயனான சிற்றின்பங்களை உடனே தந்து மக்களை ஏமாற்றிவிடுதலின், அவர்கள் எல்லாரும் அதன் வழி நடத்தலில் முயற்சியுஞ் சுறுசுறுப்பும் மிகுதியும் உடையராய் நிற்கின்றனர். இதுபற்றியன்றோ, குமரகுருபர அடிகளும்,

“சிற்றின்பம் சின்னீர தாயினும் அஃதுற்றார் மற்றின்பம் யாவையுங் கைவிடுப.

என்று அருளிச் செய்தனர். இங்ஙனந் தீயொழுக்கமாகிய கொடுவேங்கைப் புலி பசித்து அலையும் இவ்வுலகின்கண், நல்லொழுக்கமாகிய அழகுசால் இளமான்கன்று எங்ஙனம் உயிர் வாழும்? ஆகவே, அக் கொடும்புலியைத் தொலைக்கும் வகை கண்டபின்னன்றோ அவ் விளமான்கன்றை வளர்க்கும் வகையுண்டாம்? கொலைக்கஞ்சாக் கொடும்புலியைத் தொலைப்பது எவர்க்கும் எளிதில் முடிவதன்று. விற்றொழிலிற் கைதேர்ந்த ஒருவன் றுணையாலன்றி அதனைத் தொலைத்தல் மற்றையோரால் முடிவதன்று. அதுபோற் சிற்றின்ப வேட்கை யை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/280&oldid=1587387" இலிருந்து மீள்விக்கப்பட்டது