உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

❖ - மறைமலையம் – 21

ஓரிடத்தில் நிகழ்வனவற்றை மற்றோரிடத்தி லிருப்பவர் உணர்ந்துகொள்ள மாட்டாதவராயும், எல்லா மக்களுங் காலத்தினாலும் இடத்தினாலும் அறியாமை யினாலும் மறைக்கப்பட்ட சிற்றறிவு வாய்ந்தவர்களாய் இருக்கின்றனர், அதனால், ஒருவர் மற்றொருவர் அறியாமல் தமது தீய விருப்பத்தைத், தமது தீய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள இடம் பெறுகின்றார்கள்; அதற்கேற்ற கள்ள ஏற்பாடுகளையுங், கள்ளச் சூழ்ச்சிகளையுஞ் செய்யத் துணிவு கொள்கின்றார்கள்.

L

இனி, இவ்வாறன்றி, எவ்விடத்திலும் எக்காலத்திலும் எத்தகையோருஞ் செய்யுஞ் செயல்களையும் அவர் எண்ணும் எண்ணங்களையும் அக்காலத்திலும் அவ்விடத்திலும் அவருள் ளத்திலும் நிறைந்துநின்று பார்க்கக்கூடிய பெரும் பார்வையும் பேரறிவும் பேராற்றலும் வாய்ந்த ஒருவன் இருப்பனாயின், அவன் எதிரே தீயதொன்றை எண்ணவுந் தீயதொன்றைச் செய்யவும் எவரேனுங் கனவினுந் துணிவரோ சொன்மின்கள்! மக்களிற் பெரும்பாலார் பிறர்பால் வைத்த அச்சத்தினாலேயே தீது செய்யாது நல்லராய் ஒழுகுகின்றனரென்பது, ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார்,

66

"அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாஉண்டேல் உண்டாம் சிறிது.'

என்று அருளிச் செய்தமையாலும் நன்கு விளங்காநிற்கும். இவ்வாறு பிறர்க்கஞ்சி நல்லராய் ஒழுகும் மக்கள் அங்ஙனந் தாம் அஞ்சி ஒழுகவேண்டாதபோது, நல்லொழுக்கத்தில் நிற்க மாட்டாரென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளிதின் விளங்கி நிற்றலால், இப் பெற்றியினரான மக்கட்கு வேறு நல்லொழுக்கத்தைமட்டும் எடுத்துக் கூறுவதாற் சிறிது பயன் றானும் விளையுமோ சொன்மின்கள்! தமக்குள்ள செல்வச் செருக்கினாலும் ஆட்களின் துணையாலும் நிலையின் உயர் வாலும் பிறர்க்கு அஞ்சவேண்டுவது இல்லாத செல்வர்களும் அரசர்களும் மடங்களின் றலைவர்களும் எவ்வளவு கொடுமை யான தீச்யெல்களையெல்லாஞ் சிறிதுமஞ்சாமற் செய்து விடுகின்றனர்! அவர்கள் செய்யுந் தீச்செயல்களை அறிந்து வைத்தும், எவரேனும் அவர் எதிரேசென்று, அவரைக் கடிந்து பேச ஒருப்படுகின்றனரா? அவர்க்கு இடித்து நல்லுரை கூறத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/279&oldid=1587386" இலிருந்து மீள்விக்கப்பட்டது