உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா அறிவுஞ் செல்வமும் நிலைமையும் வாய்ந்தவர்கள் இல்லாதபோது, எவரும் எத்தகைய தீங்குஞ் செய்யப் பின்னிடாமையினையும், அந் நான்கினுந் தமக்கு மேற்பட்டவர்கள் தம்பக்கத்தே இருக்கும்போது அவர்கட்கு அஞ்சி நல்லராய் ஒழுகுதலையும் மக்கள் வாழ்க்கையில் நாம் நாடோறுங் கண்டுவருகின்றனம் அல்லமோ? இவ்வியற்கையை உற்றுநோக்குங்கால், மக்கள் நல்லொழுக்கமுடையவர்களாய் நடப்பதெல்லாம், அவர்கள் தம்மோடொத்த அல்லது தமக்கு மேற்பட்ட மக்களால் தாம் சூழப்பட்டிருப்பது பற்றியேயாம். பிறர்க்கு அஞ்சவேண்டுவ தில்லாத காலத்திலும், பிறராற் சூழப்படாத இடத்திலும் மக்கள் நல்லொழுக்க முடைய வர்களாய் நடப்பர்களாயின், அப்போது தான் அவர்களை உண்மையான நல்லொழுக்கமுடையவர் ளென்று சொல்லுதல் தகும்.

ஆனால், 'மற்ற மக்களின் சேர்க்கையும் அவர்களுக்கு அஞ்சும் அச்சமும் இல்லாதபோது, நாம் விரும்பியபடியே ஏன் நடக்கக் கூடாது?' என்று ஒவ்வொரு வனும் ஒவ்வொருத்தியும் எண்ணுவராயின், உலகத் தில் நல்லொழுக்கமென்பதே தலைகாட்டாதொழியும். மேலும், அஞ்சத்தக்க மக்களும் அஞ்சத்தக்க அரசும் இருந்த விடத்தும், அம் மக்களும் அரசும் அறியாமல் தாம் வேண்டிய படி நடக்கத் தக்க கள்ளமுஞ் சூழ்ச்சியும் நாளுக்கு நாள் புதிய புதியவாய்க் கண்டுபிடித்துப், பலர் பலகாலுந் தமது தீய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளுதலையும் நாம் நாடோறுங் கண்டு வருகின்றோம். இங்ஙனந், தீய எண்ணத் துக்குந் தீயசெயலுக்கும் ஏற்ற கள்ளமுஞ் சூழ்ச்சியும் பெருகப்பெருக, உலகின்கண் நல்லொழுக்கம் நிலைப்பது எங்ஙனம்? அறிஞர்களே கூர்ந்து பார்மின்கள்! இவ்வாறு மக்கள் தமது தீய எண்ணத்தை நிறை வேற்றிக் கொள்ளு வதற்குக் கள்ளத்தையுஞ் சூழ்ச்சியையுந் தமக்குத் துணை யாகப் பற்றுதல் ஏனென்று ஆராய்ந்து பார்ப்போமாயின், மற்றவர்கள் தமது கள்ளத்தையுந் தமது சூழ்ச்சியையுங் கண்டுகொள்ள மாட்டார்களென்னுந் துணி வினாலேயாம். ஒருவருள்ளத்தில் நிகழ்வனவற்றை மற்றொருவர் அறிய மாட்டாதவராயும், ஒரு காலத்தில் நிகழ்வனவற்றை மற்றொரு காலத்திலிருப்பவர் தெரிய மாட்டாதவராயும்,

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/278&oldid=1587385" இலிருந்து மீள்விக்கப்பட்டது