உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

7. நல்லொழுக்கம் இன்னது

.

என்னும் ஆராய்ச்சி

இந் நிலவுலகத்தின்கண்ணுள்ள மக்களெல்லாரும் பசி காமம் என்னும் இருபெரு வேட்கையுடையவர்களாய் அவ் வேட்கைகளை நிறைவேற்றிக் கொள்ளுதலிற் பெரு முயற்சி யுடையவர்களா யிருக்கின்றனர். தமது பசிவேட்கையைத் தணித் தற்கு உணவுப் பண்டங்களைத் தேடுதலிலுந், தேடிய அவற்றாற் பசி தணிந்தபின் எழும் காம வேட்கையைத் தணித்தற்குத் தமக்கி யைந்த மகளிரைக் கூடுதலிலுமே இவ்வுலகத்தின்கண் உள்ள எல்லாமக்களின் எல்லாவகையான முயற்சிகளும் வந்தடங்கு கின்றன. தமது வாழ்க்கைக்கு வேண்டும்பொருளைத் தேடித் தாகுத்துக் கொள்வதிலும், தமக்கிசைந்த மகளிரைக் கூடுத லிலும் முயன்று முனைந்து நிற்கையில், மக்களெல்லாருந் தமது நலத்தையே கருதி நிற்கின்றாரல்லாமற் பிறர்நலத்தை ஒரு சிறிதுங் கருதுகின்றாரில்லை. தாம் செய்யும் இவ்விருவகை முயற்சிக்கும் இடையூறாய் இருப்பவர்களைக் காலமும் இடமும் வாய்த்தால் தொலைத்துவிடுதற்குஞ் சிறிதும் பின் வாங்கு கின்றார்களில்லை. எவ்வளவு அறிவிற் சிறந்தவர்களும், எவ்வளவு நல்லியற்கையிற் சிறந்தவர்களும், எவ்வவு நன்னிலை யிற் சிறந்தவர்களுந் தமது கருத்து நிரம்பும் பொருட்டுத், தமது வாழ்க்கை இன்பமாய் நடைபெறும் பொருட்டுப் பிறரது கருத்துக்கு மாறாய்ப் பிறரது வாழ்க்கைக்குத் துன்பம் விளைப்பவர்களாய் ஒழுகிவிடுகின்றனர். மிகுந்த செல்வமும், அதனால் மிகுந்த ஆட்களின்றுணையும், அதனால் மிகுந்த வலிமையும் படைத்தவர்கள் எத்தகைய தீயசெயல்களையுந் தாம் விரும்பியபடியே செய்துவிடுகின்றார்கள்! எத்தனை குடி களையுந் தாம் வேண்டியபடியே கெடுத்துவிடுகின்றார்கள்! எத்தனையோ நன்மக்களின் வாழ்க்கைகளையெல்லாம் பாழாக்கிவிடுகின்றார்கள்! தமக்கு மேற்பட்ட ஆற்றலும்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/277&oldid=1587384" இலிருந்து மீள்விக்கப்பட்டது