உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243

6. சைவ சமயம் நல்லொழுக்கத்திற்குக் கடவுள் உணர்ச்சி முதன்மை என்கின்றது

இவ்வுண்மையை நன்கு ஆராய்ந்து உணரமாட்டாதார் சிலர் அறவொழுக்கத்திற்குங் கடவுள் நினைவுக்கும் யாது தொடர்பு உளது? கடவுளை எவருங் காணாதிருக்கையிற் கடவுளை நினைத்தல் எங்ஙனம்? அங்ஙனம் நமது நினைவுக்கு எட்டாத ஒரு பொருளை நினைத்தலால் நாடோறும் நமது நினைவோடு கூடிச்செய்யும் ஒழுக்கங்களைச் சீர்திருத்துதல் எப்படி? என்று எல்லாம் வினாவி நல்லொழுக்கத்தில் நிற்றற்குக் கடவுள் நினைவு ஒரு சிறிதும் வேண்டாம் எனக் கிளந்து ஆரவாரம் புரிகின்றனர். ஆதலின், அவர்தங் கூற்றினை ஆராய்ந்து அது பொருந்தாமையைச் சிறிது விளக்கிக் காட்டுவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/276&oldid=1587383" இலிருந்து மீள்விக்கப்பட்டது