உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

❖ 21❖ மறைமலையம் – 21

கத்தின்கண் மாறாமல் நின்று அமைதி யாய் வாழ்ந்துவரப், பௌத்தசமய மக்களோ அவ்வொழுக்கத் தின் கட் சிறிதும் நிலைநிற்க மாட்டாராய் வன்னெஞ்சராய் வாழ்வதேன்? இப்போதுள்ளபடி இவ்விருதிறத்தார் நிலை களையும் சீர்தூக்கி ஆராய்ந்து பார்ப்போமாயின் ஒரு திறத்தார் தூயவொழுக்கத்தின்கண் நிலைபெற்று வாழ்தற்கும்,

மற்றொரு திறத்தார் அதன்கண் நிலைபெற்று வாழாமைக்கும் முதன்மை யான ஏது வேறொன்று இருக்க வேண்டுமென்பது புலனாகின்ற தன்றோ? வெறு நல்லொழுக்கத்தை மட்டும் அறிவுறுத்தும் பௌத்தசமயமானது தன்மக்களை நல் லொழுக்கத்தின் கண் நிலைப்பித்துக் கொள்ளமாட்டா ா தாயின், வெறு நல்லொழுக் கத்தை மட்டும் எடுத்துரைக்கும் எந்தமதமும் மக்கட்குச் சிறிதும் பயன்படாதென்பது தற்றென விளங்குகின்ற தன்றோ? மற்றுச், சைவசமயமோ நல்லொழுக்கத்தை வலியுறுத்திச் சொல்வதோடு அமையாது, அந்நல்லொழுக்கத்துக்குத் தலைவனும், அந்நல் லொழுக்கத் னும்,அந்நல் தின் பயனைக்கொடுப்பவனும் அவ்வொழுக்கத்தி னின்று தவறுவாரைத் துன்புறுத்துபவனும் ஆகிய எல்லாம் வல்ல முழுமுதற்கடவுள் ஒருவன் உளன் என்பதையும், அவன் பால் எல்லாமக்களும் அச்சமும் அன்புங் கொண்டு ஒழுகுதல் இன்றியமையாததென்பதையும் உடன் வலியுறுத்திச் சால்லா நிற்கின்றது. அதற்கேற்றபடியாகவே சைவசமய நன்மக்களும் இறைவன்பால் அச்சமும் அன்புங் கொண்டு ஒழுகுதலின் அறவொழுக்கத்தின் வழுவாராய் அமைதியாய் வாழ்ந்துவரா நிற்கின்றனர். எனவே, அறவொழுக்கத்தை வற்புறுத்துவதோடு, அவ்வறவொழுக்கத் தில் வழுவா தொழுகும் ஆற்றலைத்தருங் கடவுள் நினைவில் மக்களை லைபெறச் செய்தலும் இன்றி யமையாததாகும். இவ்வாறு செய்யவல்ல மதமே மக்கள் வாழ்க்கைக்கு மெய்யாகவே பயன்படுவதுடன், தானும் என்று மழியாதாய் நீடுநின்று விளங்கும்.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/275&oldid=1587382" இலிருந்து மீள்விக்கப்பட்டது