உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

241

  • கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா பின்பற்றுவார் தொகையும் இவ்விந்தியநாட்டின் கண் வரவரச் சுருங்கி ஒழிவதாயிற்று. இந்திய நாட்டுக்குப் புறம்பேயுள்ள இலங்கையிலும் பர்மா, சீயம், ஐப்பான், சீனம் முதலிய டங்களிலும் பௌத்த சமயத்தைப் பின்பற்றுவோர் தொகை மிகுதியா யிருப்பினும் அவர்கள் பேரளவிற் பௌத்தர்களாகக் காணப்படுகின்றனரேயன்றி, உண்மையிற் பௌத்த சமயக் கோட் பாடுகளைச் சிறிதுந் தழுவினவர் களாயில்லை. எந்த உயிர்க்கும் எந்த ஏதுவினாலும் எவ்வகைத் தீங்கும் செய்யலாகாதென்று பெளத்த சமயத்தைத் தோற்று வித்த கௌதம சாக்கியர் தம்வாழ்நாள் எல்லையளவும் மடித்து மடித்துச் சொல்லி வந்தாராயினும், மேற்கூறிய நாடுகளில் இப்போதுள்ள பௌத்த சமய மக்கள் அவர் சொன்ன அறிவுரையைச் சிறிதாயினும் பின்பற்றி நடப்பவர்களாய் ல்லை. அவர்களெல்லாரும் எந்தவகையான சிற்றுயிரையுங் கான்று அவற்றின் ஊனைத் தின்பதில் மிகுந்த முயற்சி யுடையவர்களா யிருக்கின்றார்கள்; அதுவேயுமன்றித், தம் போன்ற மக்களையுஞ் சிறிது சினம் வந்தாலும் முன்பின் பாராமற் குத்திக் கொலை செய்து விடும் இரக்கமில்லா வன்னெஞ்சர் களாயு மிருக்கின்றார்கள்; அவர்க் குள்ள காமவேட்கையோ, அவ்வேட்கையால் உண்டாகுந் தீங்கு களோ எம் ஒரு நாவினாற் சொல்லியடங்கா. ங்கா. இங்ஙனமாக இப் பௌத்த சமயமக்கள் வரைதுறையின்றித் தீய செயல்களைச் செய்துவரும்போது இவர்களைப் பௌத்த சமயிகள் என்று சொல்லலாமோ? அறிஞர்களே கூர்ந்து பார்மின்கள்! இவ் விந்திய நாட்டின் கண்ணுள்ள சைவசமயத்தவரிற் பெரும் பாலார் உயிர்க்கொலை செய்யாதவர்களாயும், ஊனுண்ணாத வர் களாயுங், காம வேட்கை மிகுந்தில்லாதவர்களாயும், அன்பும் இரக்கமுந் தூய்மையும் வாய்ந்து இனிய வாழ்க்கை உடையவர் களாயிருக்க, மற்றை அயல்நாடுகளிலுள்ள பௌத்தரும் பிறரும் கொலைக்கஞ்சாக் கொடுநெஞ்சர்களாய் இருப்பதேன்? சைவ சமய ஆசிரியர்களும் நல்லொழுக்கத்தை எல்லாருங் கடைப் பிடித்தல் வேண்டுமென்று வற்புறுத்திக் கூறியிருக்கின்றார்கள். பௌத்த சமய ஆசிரியர்களும் அங்ஙனமே நல்லொழுக்கத்தை வலியுறுத்திப் பேசியிருக்கின் றார்கள். ஆனாற், சைவசமய மக்கள் மட்டும் இன்று காறுங் கொல்லாமை, புலாலுண்ணாமை முதலான அறவொழுக்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/274&oldid=1587381" இலிருந்து மீள்விக்கப்பட்டது