உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

5. பௌத்த சமண ஒழுக்கமுறைகள் உலகத்தவரைத் திருத்தமாட்டாமை

ஆனால், இந் நல்லொழுக்கங்களில் தம்மை நிலைபெறச் செய்வதும் பிறரை நிலைபெறச் செய்வதுமே கைகூடாத முயற்சியாய்த் தொன்றுதொட்டுக் காணப்பட்டு வருகின்றன. எத்தனையோ அறிஞர்களும் எத்தனையோ சான்றோர்களும் எத்தனையோ முனிவர்களும் எத்தனையோ சமயகுரவர்களுங் காலங்கடோறுந் தோன்றித் தோன்றி நல்லொழுக்க முறை களையும் அவற்றின் நலங்களையும் மக்கட்குப் பலகாலும் பலவிடத்தும் பலவழியும் எடுத்தெடுத்துச் சொல்லிச் சொல்லி மிகமிக வற்புறுத்தியும் எண்ணிறந்த மக்களுள் விரல்விட்டு டு எண்ணிச் சொல்லத்தக்க ஒருசிலரன்றி மற்றைப் பெரும் பகுதியோரெல்லாம் நல்லொழுக்கத்தின் கண் நிலைநிற்க மாட்டாராயுந் தீயவொழுக்கத்தையே விரும்பிச் செய்வாராயும் நடந்துவருதலை இன்றுகாறுங்கண்டு வருகின்றனமல்லமோ? ஆகவே, நல்லொழுக்கமானது மக்களைப் புனிதப்படுத்து மென்பது உண்மையேயாயினும், அந்நல்லொழுக்கத்திற் பிறழாமல் மக்களை அதன்கண் நிலைப்பிக்கச் செய்யும் பேராற்றல் ஒன்று தோன்றினாலன்றி அந்நல்லொழுக்கம் மக்களுக்குச் சிறிதும் பயன்றராதென்பதனை இனிது காண் கின்றாமல்லமோ? எனவே, நல்லொழுக்கத்தைக் கற்பிப்பதோடு அந்நல்லொழுக்கத்தில் நிலைப்பிக்கும் ஆற்றலையும் உடன் வருவித்தலே இன்றியமையாது செயற்பால அறிவுமுறையாகும். மேற்காட்டிய பௌத்த சமண சமயத்தவர் ஏனையோரைப் போல் நல்லொழுக்கத்தை மட்டும் எடுத்துக் காட்டினரேயல்லா மல் அந்நல்லொழுக்கத்தில் நிலைப்பிக்கும் ஆற்றலைக் காட்டி னாரல்லர். அதனாலன்றோ அவர் காட்டிய நல்லொழுக்க அறிவு பயன்ப பயன்படாதொழிந்ததோடு அவர்தம் சமயத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/273&oldid=1587380" இலிருந்து மீள்விக்கப்பட்டது