உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

253

முடித்தற்கு அஞ்சாத அவ்வரசன் கடவுளுக்கஞ்சித் தான் கொண்ட தீய கருத்தை அறவே விட்டொழிப்பானானான். அந்நேரத்தில் அவன் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா யிருந்திருப்பானாயின், தான் கருதிய தீச்செயலைக் கட்டாயம் முடித்திருப்பானல்லனோ! ஆனதுபற்றியே மக்களியற்கையை

நன்கு

ஆராய்ந்துணர்ந்த நம் தொல்லாசிரியர்கள் நல்லொழுக்கத்தை எடுத்து வற்புறுத்துங்கால்,

66

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைக் சுடும்.”

என்றும்,

“வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

(குறள் - 293)

ஐந்தும் அகத்தே நகும்.”

(குறள் - 293)

என்றும்,

“வஞ்சித் தொழுகும் மதியிலிகாள் யாவரையும் வஞ்சித்தோ மென்று மகிழன்மின்-- வஞ்சித்த

எங்கு முளனொருவன் காணுங்கொல் லென்றஞ்சி அங்கங் குலைவ தறிவு.’

وو

(நீதிநெறி - 94)

என்றும் தன் உள்ளத்து உள்ளுணர்வாய் மறைக்கப் படாமல் விளங்கி நின்று நல்லது தீயது பகுத்துக்காட்டும் இறைவ னொருவன் உளன் என்பதை நினைந்து அஞ்சி ஒழுகுக என்று அருளிச் செய்வாராயினார். எனவே, நம் சைவ ஆசிரியன்மார் எல்லாம்வல்ல இறைவனைச் சான்றாக வைத்து நல்லொழுக்க முறைகளை அறிவுறுத்திய அறிவுரைகளே மக்களுக்கு உண்மையிலே பயன்படுவனவாதலும், பௌத்த சமண் ஆசிரியர் எங்கும் எல்லாருள்ளத்திலுஞ் சான்றாய் உள்ள இறைவனை அறவே விடுத்துக்கூறிய அறிவுரைகள் மக்கள் நல்லொழுக் கத்தில் நிலைபெறுத்துதற்கு ஒரு சிறிதும் பயன்படுவன ஆகாமையுந் தெள்ளிதின் விளங்கா நிற்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/286&oldid=1587393" இலிருந்து மீள்விக்கப்பட்டது