உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

9. கடவுளிடத்து அன்பும் அச்சமும்

உடையோர் நல்லராய் ஒழுகுதல்

L

இவ்வாற்றால், நல்லொழுக்கமானது மக்களுயிரைத் தூய்மை செய்யுந் திறத்ததேயாயினும், அது கடவுளுணர்ச்சி உடையாரிடத்தன்றி நிலைபெறமாட்டாமையால் அதற்கு ஆற்றலையும் நிலைபேற்றினையுந் தருவது கடவுள்பால் வைத்த மெய்ந்நம்பிக்கையும் அச்சமும் அன்புமேயாமென்று கடை ப் பிடித்தல் வேண்டும். உயிர்கள் தாமேயறிந்து கேளாதிருக் கையிலும், அவர்கட்கு வேறு எவராலுந் தர முடியாத அரிய உடம்புகளையும், அவ்வுடம்புகளோடு கூடிய அவை உயிர் வாழ்தற்கு எண்ணிறந்த அரும் பண்டங்களையும் படைத்து வகுத்துக் கொடுத்திருக்கும் ஆண்டவன்றன் எல்லையற்ற இரக்கத்தையும் அருளையும் ஆற்றலையும் ஆராய்ந்து ஆராய்ந்து நினைந்து நினைந்து உருகுவார்க்கு எல்லா உயிர்கள் மாட்டும் அன்பும் இரக்கமுங் கொண்டு ஒழுகும் நல்லெண் ணமும் நன்முயற்சியுமே வாய்க்குமல்லா மற் பிறவுயிர்க்குத் தீதுசெய்யுந் தீய எண்ணமுந் தீயமுயற்சியும் ஒரு தினைத் தனையும் உண்டாகா; கடவுளை நம்பாதவர்க்குக், கடவுளி டத்து அன்பில் லாதவர்க்குக், கடவுளிடத்து அச்சமில்லாத வர்க்குத் தாமுந் தம்மைச் சார்ந்தாரும் நலமெய்துதலிலேயே எண்ணமும் முயற்சியும் முனைந்து நிற்குமல்லாமற் பிற உயிர்களின் நலத்தை எண்ணும் எண்ணஞ் சிறிதும் உண்டாகாது; அதுவேயுமன்றித், தமது நலத்துக்குத் தமது கருத்துக்குத் தமது முயற்சிக்கு மாறான எவரையும் எவ்வகையினாலேனுந் தொலைத்து விடுந் துணிவும் எண்ணமுங் கடுமுயற்சியும் அவர்பாற் குடி கொண்டு நிற்கும். ஆகவே, அவர் நல்லெண்ணமுடையராதலும் நல்லொழுக்க முடையராதலும் யாங்ஙனம்? தீய எண்ணங்களைத், தீய வினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/287&oldid=1587394" இலிருந்து மீள்விக்கப்பட்டது