உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

255

களைக் கோடிக்கணக்காய்ப் பெருக்கும் அவர்க்குப் பிறவித் துன்பம் அறுதலும் யாங்ஙனம்? கடவுள்பால் மெய்யன் பிலார்க்கு, நல்லொழுக்கம் இல்லையாமாகலானும், அஃதில் லையாமாகவே அவர்க்கு அடுத்தடுத்து வரும் பிறவித் துன்பம் அறுதலும் இல்லையாமாகலானும், அவரெல்லாம் மீண்டும் மீண்டும் பிறவாது இரார். மற்றுக், கடவுள்பால் மெய்யன்பு டையார்க்கோ நல்லொழுக்கம் நிலைபெறுதல் திண்ண மாதலின், அவர் அதனால் மனந் தூயராகி, அதனாற் பிறவித் துன்பம் வேரோடு அறப்பெற்று இறைவன் திருவருள் இன்பத்தைப் பெறுதல் திண்ணம்.

து தெரித்தற்கே, நம் பெருமான் மாணிக்கவாசகர் “என்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட்கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே" என்று அருளிச் செய்தார். கடவுளை நேரே கண்டு, அவர் அருளை நேரே பெற்று, அவர்பால் வைத்த மெய்யன்பால் நெஞ்சம் நெக்கு நெக்குருகி, அதனால் எல்லா உயிர்கள் மாட்டும் எல்லையற்ற அன்பும் இரக்கமும் நிகழப் பெற்று, அதனால் இனிப் பிறவி எடாத அரும்பெரும் பேற்றினையும் பெற்றுத் தாம்பெற்ற அவ்வுண்மைப் பேற்றினையும் ஐயந்திரிபுக்குச் சிறிதும் இடனின்றி நம்பால் வைத்த அருட் பெருக்கால் நம் பெருமான் வலியுறுத்திச் சொல்லியிருக்கும் இம்மெய்யுரை கொண்டே, கடவுளருளைப் பெற்றார்க்கு அவ்வருளே பிறவியறுக்கும் உண்மை மருந்தாதல் கண்டு கொள்ளப்படும் என்று, இதுகாறுங் கூறியவாற்றால், எல்லாம் வல்ல முழுமுதற்கடவுள், எல்லாப் பொருள்களையும் எல்லா உயிர்களின் உணர்ச்சி களையுங் கடந்து நின்று இருவினை யற்றவராய், அவ்விரு வினையால் வரும் ஊனுடம்பு இல்லாத வராய் ஊனுடம்பு இல்லாமையாற் பிறப்பு இறப்புகள் இல்லாத வராய்ப், பிறப்பிறப்புகளில்லாமையால் தாய் தந்தையர் சுற்றத்தவர் முதலான தொடர்புகளில்லாதவராய், என்றும் விளங்கிய அறிவினராய், என்றும் மாறாத இன்பத்தி னராய், எங்குமுள்ள வராய், எல்லா ஆற்றலும் வாய்ந்த வராய், எல்லா முதன்மையும் உடையவராய் இருப்ப ரென்பதூ உம்; அங்ஙன மிருப்பாராகிய அவர் அறியாமை இருளிற் புதைந்து கிடந்தே மாகிய யாமும், எம்மினுந் தாழ்ந்த சிற்றுயிர்களுந் தம்மையறிந்து தம்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/288&oldid=1587395" இலிருந்து மீள்விக்கப்பட்டது