உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மறைமலையம் – 21

வேண்டிக் கேளா திருக்கையிலும், எமது அறிவை விளக்கி எமக்கு இன்பத்தைத் தருதற்கு, மிகவும் வியக்கத்தக்கவான இவ்வுடம்புகளையும், உடம்புகள் உலவுதற்கு இவ்வுலகத் தையும், இன்பத்தை நுகர்தற்குப் பலவேறு அரும் பண்டங் களையும் அமைத்துக் கொடுத்தி ருக்கும் வகை களை உற்று நோக்க நோக்க, அவர் உயிர் களெல்லாரிடத்தும், அளவிறந்த அன்பும் இரக்கமும் அருளும் உடையராயிருக்கும் உண்மை விளங்குமென்பதூஉம்;

அங்ஙனமவர் உயிர்களிடத்து

மாணிக்கவாசகப்

அளவிறந்த இரக்கமுடைய ராயிருத்தலால் தம்மையுந் தமது இயல்பையும் நன்கு உணர்ந்து காணமாட்டாத நம்ம னோர்க்குத் தாயினுஞ் சிறந்த தலையளி உடையராய் அவர் தாமே ஓர் அருளுருக்கொண்டு நம்மனோர் கண்ணுக்கு நம்மனோரை யொப்பத் தோன்றி நம்மை யாட் கொண்ட ருளு வரென்பதூஉம்; பரு மானுக்குக் குருவடிவிற்றோன்றி அவரை யாட் கொண்டு மின்னொளி தோன்றி மறைந்தாற்போல் அறைந்தருளின மெய்ந் நிகழ்ச்சி அடிகள் தாமருளிச் செய்த திருவாசகச் செந்தமிழ்ச் செழும் பாடல்களில் திண்ணமாக எடுத்து அறிவுறுத்தினமையே அரும் பெருஞ்சான்றாமென் பதூஉம்; அவ்வாறு இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு இறைவனருளிற் றோய்ந்தபின் பிறவியும் அப்பிறவியால் வருந்துன்பங்களும் முற்றும் அற்றொழியு மென்பதற்கு அடிகளே தாம்பெற்ற அவ்வரும் பேற்றினைக் கட்டுரைத்துச் சொல்லுதலே சான்றாமென்பதூஉம்; வாறன்றி வெறு நல்லொழுக்கத் தினாலேயே பிறவிநோய் தீருமா கலின் இதன் பொருட்டுக் கடவுளுணர்ச்சியுங் கடவுள் வழி பாடும் வேண்டாமென்பாருரை ஒருசிறிதும் மக்கட்குக் பயன்படாத வெற்றுரையேயாமென்ப தூஉம் நன்கு விளக்கப்பட்டன. இவ்வாற்றாற், கடவுளின் உண்மை நிலையாவது இன்னதென்ப தனை எவரும் நன்குணரற்பாலர்.

நன்

வ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/289&oldid=1587396" இலிருந்து மீள்விக்கப்பட்டது