உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257

10. கடவுள் நிலைக்கு மாறான புராணங்களும் மாறாகாத சில பழம் புராணங்களும்

இனிக் கடவுள்நிலைக்கு மாறாவன இவை என்பதை ஒரு சிறிது எடுத்து விளக்குவாம். இஞ்ஞான்று புராணங்களென்று

வடமொழியிலெழுதப்பட்டும், வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டும் வழங்கும் நூல்களிற் பெரும்பாலன, கடவுள் நிலைக்கு மாறான கதைகளைக் கட்டிச் சொல்லுவன வாய்க், கடவுளின் உண்மையை யறிய வொட்டாமல் மக்களறி வைத் தடைசெய்து, அவர்களை அறியாமைப் படுகுழியி லாழ்த்தி, அவர்கள் ஒருவரோடொருவர் அன்பினால் அளவ ளாவி வாழாமல் தம்முளே இடைவிடாது கலாம் விளைத்துத் துன்பவாழ்க்கையிற் கிடந்துழலச் செய்வனவாய் இருக்கின்றன. புராணங்களுட் பெரும்பாலன இத்தகைய தீய தன்மை யுடையவாயினும், ஏனைச் சில பழம் புராணங்கள் கடவுள் உண்மையை நுண்ணறிவில்லார்க்கு விளங்கச் செய்தற் பொருட்டு அறிவுடை மேன்மக்களாற் கட்டப்பட்ட நல்ல கதைகளை உள்ளடக்கினவாகவும் இருக்கின்றன. இச் சிறந்த பழம் புராணங்கள் சிலவற்றின் நல்ல கதைகளையும், பின்வந்த தீய அறிவினர் தத்தம் தீய கருத்துக்கு வேண்டியபடியெல்லாந் திரித்து அவற்றின் உயர்ந்த நோக்கங்களையும் பாழ்படுத்தி விட்டனர்.இப்போது வழங்கும் புராணங்களெல்லாம் பழைய சில புராணங்களின் உயர்ந்த கருத்துக்களைத் திரிபு செய்தவை களும், அவற்றுக்கு மாறாய் எழுந்தவைகளும், அவற்றின் உண்மை நோக்கத்தைப் பாழ்படுத்த முனைந்தவைகளுமே U யாகும். இப் புராணப் பெருங் குப்பைக் குவியல்களிற் பழம் புராண உண்மைக் கருத்துக்களாகிய விழுமிய மணிகள் சிற்சில புதைந்து கிடக்கின்றன. இப் பெருங் குப்பையைக் கிளறி, அவ்வரும்பெறல் மணிகளைப் பொறுக்கி எடுத்தல் உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/290&oldid=1587397" இலிருந்து மீள்விக்கப்பட்டது