உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

❖ 21❖ மறைமலையம் – 21

அறிவு நூலாராய்ச்சி யில் நெடுக ஆழ்ந்து பயின்று தேர்ச்சி பற்றார்க்கன்றி ஏனை யோர்க்கு எளிதில் முடியாது. முடியாதாகவே, இஞ்ஞான்றுள்ள வர்கள் சைவரென்றும் வைணவரென்றும் வேதாந்திகளென்றும் சாத்தேயர் என்றும் கெளமாரரென்றும் காணாபத்திய ரென்றும் பல்வேறு பிரிவினராகிப், பல்வேறு கொள்கை யினராகி ஒருவரோ ாருவர் பெரிதும் மாறுபட்டுத் தத்தமக்கு ஏற்ற புராணங் களைக் கணக்கில்லாமற் பெருக்கியெழுதியிருக் கின்றனர்கள்.

இங்ஙனம் அச் சமயப் பிரிவினர் தாந்தாம் கற்பித்துக் கொண்ட புராணங்களில் தாந்தாம் வழிபடும் கடவுளர்களை உயர்த்துதற்பொருட்டுப் பழம் புராணங்களில் எல்லாம் வல்ல ஒரு முழுமுதற் கடவுள்மேல் வைத்து எழுதப்பட்ட கதைகளைத் தமக்கேற்றபடியெல்லாந் திரித்தும், முன்னில்லாதவைகளைப் புதிது புகுத்தியும், முன்னுள்ளவைகளுக்கு மாறானவைகளைச் சேர்த்தும், முன்னுள்ள இறைவனியல்புகளை முற்றும் இழிவு படுத்தியும் புரட்டுகள் செய்வாராயினர். இப் பொல்லாப் பெரும் புரட்டுகளையும் முன்னுள்ள பழம் புராணங்களின் நற்பெருங் கதைகளையும் வேறு பிரித்துக் காணும் பகுத்தறிவும் ஆராய்ச்சி யுமின்றி, முன்னுள்ள சிறந்த கதைகளையும் பின்வந்த புரட்டுக் கதைகளையும் பின் வந்தோர் ஒன்று சேர்த்து எல்லாவற்றையும் ஒரே வகையாக வைத்துப் பாராட்டப் புகுந்தமையாற் புராணங்கள் என்னும் பெயர்க்கே புரட்டுகள் என்னும்பொருள் சிறிது ஆராய்ச்சியுடையார் குழுவிலும் வழங்கிவரா நிற்கின்றது. கடவுள் நம்பிக்கை இல்லாருங் கடவுளைப் பற்றிய எல்லாக் கதைகளையும் பொய்யென்று இகழ்பவராயிருத்தலால், அவரும் ஆராய்ச்சி யுணர்வின்றிப் பின்வந்த புரட்டுக் கதைகளோ டொப்பவே முன்னிருந்த நற்பெருங் கதைகளையும் இழித்துப் பேசிவிடுகின்றனர். இவ்வாறாகக், குருட்டு நம்பிக்கையுடையார்

எல்லாக் கதைகளையும் வரைதுறையின்றிக் கொண்டாடுங் கொண் டாட்டும், சிறிதாராய்ச்சியுடையார் பலகதைகள் புரட்டா யிருத்தல் கண்டு சிலநற் கதைகளையும் விலக்கிவிடும் விலக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதார் எல்லாவற்றையும் ஒருங்கு சேர்த்து இகழ்ந்தொதுக்கும் ஒதுக்கும், மக்களின் அறிவு வளர்ச்சி அன்பு வளர்ச்சிக்குத் தீதுபயப்பனவாய் இருத்த லாற்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/291&oldid=1587398" இலிருந்து மீள்விக்கப்பட்டது