உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

259

பொது மக்களின் நன்மையையும் முன்னேற்றத் தையுங் கருதும் நல்லறிஞர்கள் அக் கதைகளை நன்கு ஆராய்ந்து பார்த்துக் கொள்ளத் தகுவன கொண்டும், தள்ளத்தகுவன தள்ளியும், இவ்வாறு கொள்ளத்தகுவன தள்ளத்தகுவன இவ்விவை என்பதைப் பொதுமக்களுக்கு நன்கு எடுத்துக் காட்டியுந் தமக்கும் பிறர்க்கும் பயன்பட ஒழுகுதல் இ இஞ்ஞான்று இன்றியமையாது செயற்பாலதோர் அரும்பெருங் கடமை யாகும். ஆனதுபற்றி, இப்புராண கதைகளுட் கொள்ளத்தகும் பழங் கதைகள் சில இவையென்பதூஉந், தள்ளத்தகும் பிற் கதைகள் இவையென்பதூஉம் ஈண்டு ஒருசிறிது விளக்கிக் காட்டுவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/292&oldid=1587399" இலிருந்து மீள்விக்கப்பட்டது