உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

11. கடவுளைப் பற்றி அறிவுடையோர் கதைகள் அமைத்த கருத்து

முதலில் முழுமுதற்கடவுளைச் சிவன் என்னும் பெயரால் வழிபட்டுவந்த பண்டைச் சான்றோர்கள், அவ்விறைவன் உயிர்களுக்கு உதவியாகச் செய்துவருஞ் செயற்கருஞ் செயல் களை ஆழ்ந்தறியும் நுண்ணறிவில்லாத பொதுமக்களுக்கு உணர்த்தும் பொருட்டாகவே, அவை தம்மைக் கதைகளாக அமைத்து வைப்பாராயினர். ஏனென்றாற், கைக்கும் மருந்து உண்ணாத சிறு குழந்தைக்கு, அதன்தாய் அம் மருந்தை ஒருசிறு கருப்பங்கட்டியின் உள்வைத்து ஊட்டி அக் குழந்தையின் நோய்தீர்த்தல் போலப், பழைய அறிஞர்களுங் கடவுளைப் பற்றிய உயர்ந்த உண்மைகளை உணர மாட்டாத பொது மக்களுக்கு அவர்கள் எளிதிலே உணரத்தக்க இனிய நல்ல கதை களிலே அவ்வுண்மைகளைப் பொதிந்துவைத்து அமைத்துப் புகட்டுவாராயினர். ஏனெனிற், கற்றவர்முதற் கல்லாதவர் ஈறான எத்திறத்தவர்க்கும் கதைகள் கேட்பதில் மிகுந்த ஆவல் இருக்கக் காண்கின்றோம். எல்லாத் தேயத்தின் கண் உள்ள எல்லா மக்களும் பண்டைக்காலந் தொட்டுக் கதைகளைக் கேட்டு மகிழ்வதிலும் அக்கதைகளைத் தொடர்ந்த செய்யுள்வடிவில் எழுதிப் பயின்று மகிழ்வதிலும் மிகுந்த கருத்துடையவர்களாய் இருந்து வருகின்றனர். கிரேக்க தேயத்தில் இவ்வாறு எழுதப்பட்டு வழங்கும் இலியட் (lliad) ஓடிசி (Odyssey) என்னும் இரு பெருஞ் சிறந்த காவியங்களும், A உரோம தேயத்தில் வழங்கும் ஈனிட் (Eneid) டிவைன் காமடி (Di- vine Comedy) என்னும் இரு பெரு விழுமிய காவியங்களும், ஐஸ்லாந்து தேயத்தில் வழங்கும் சாகாக்கள் (Sagas) என்னுங் காவியங்களும், ஆங்கிலதேயத்தில் ஷேக்ஸ்பியர் (Shakespeare) எழுதிய நாடகக் காவியங்களும், மில்டன் எழுதிய துறக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/293&oldid=1587400" இலிருந்து மீள்விக்கப்பட்டது