உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

261

நீக்கம், துறக்கப்பேறு (Paradise Lost and Paradise Regained) என்னும் இருபெருந் தீஞ்சுவைக் காவியங் களும், ஆரிய நாட்டில் வழங்கும் பாரதம், இராமாயணம், பதினெண் புராணங்களும், செந்தமிழ்நாட்டில் வழங்கும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளாமணி, சிந்தாமணி, பெரிய புராணம் முதலிய அருந்தமிழ்க் காவியங் களும், இஞ்ஞான்று எல்லாத் தேயங் களிலும் எல்லா மொழிகளிலுங் கணக்கில் லாமல் உரை நடையில் எழுதப்பட்டு வெளிவந்து வழங்கும் ‘நாவல்க’ளென்னும் புதுக்கதைகளும், ஆகிய இவையெல்லாங் கதைகள் கேட்பதிலுங், கதைகள் படிப்பதிலும் மக்கள் மட்டுக் கட ங்கா ஆர்வமுடைய ராயிருத்தலை இனிது புலப்படுத்து கின்றன அல்லவோ? இவ்வாறு கதைகள் கற்பதில் ஆர்வம் மிகுதியும் உடைய ராயிருக்கும் மக்களின் மன இயற்கையை நன்கு உணர்ந்து பார்த்தே பௌத்த சமயத்தைப் பரப்பிய ஆசிரியர்கள் ‘ஜாதக காதைகள்' என்னுங் கதைத் தொகுதியினையும் உண்டாக்கி னார்கள். கிறித்துவ மதத்தை நாட்டிய ஏசுகிறித்து என்னும் ஆ சிரியரும் தாம் அறிவுறுத்துதற் கெடுத்துக் கொண்ட அரிய பெரிய உண்மைகளைச், சிறுசிறு கதைகளிலமைத்து அவை தம்மை மக்களுக்கு மொழிந்திட்டார். இங்ஙனமே ஒவ்வொரு சமய ஆசிரியருந் தாந்தாம் அறிவுறுத்தும் உண்மை களில் மக்கள் உள்ளமானது பதிந்து நிற்றற் பொருட்டு, அவை தம்மை எல்லாரும் எளிதில் உணரத்தக்க இனிய கதைகளில் அமைத்து அறிவுறுத்திவந்திருக்கின்றனர். ஆகவே, மக்களின் இம் மனைவியற்கையினை நன்கு ஆராய்ந்துணர்ந்தவர்களான சைவசமயக் சான்றோர்களுந் தாம் அறிவுறுத்துதற் கெடுத்துக் கொண்ட இறவனருள் நிகழ்ச்சிகளையும் அரும்பேருண்மை களையும் உயர்ந்த பல கதைகளின் வாயிலாகவே அமைத்து வைத்து மக்களுக்குணர்த்துவாராயினர். இவ்வாறு பண்டைக் காலந்தொட்டு இன்றுகாறும் அறிவுடையோரெல்லாருங் கதைகளின் வாயிலாகவே தாம் ஆராய்ந்து கண்ட அரும் பேருண்மைகளை அறிவுறுத்தி வந்திருக்கின்றனர்களாதலால், மக்களுள்ளத்தில் இம்மை மறுமை வாழ்க்கையின் உண்மை களை எளிதிலே பதிய வைத்தற்குக் கதைகள் பெரிதும் பயன்படுவன என்பது பிறர்நலங் கருதும் அறிஞர்கள் கருத்திற் பதித்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/294&oldid=1587401" இலிருந்து மீள்விக்கப்பட்டது