உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

12. புராணக்கதைகள் முற்றும் பொய்யென்பாருரை பொருந்தாமை

நன்று சொன்னீர்கள்! கதைகளெல்லாம் பொய்யும் புளுகும் புனைந்துகட்டிச் சொல்வனவாதலால், அவை தம்மை வழங்கவிடுதல் குற்றமாம்; ஆதலாற், கதைகளெல்லாவற்றையும் ஒருங்கே நெருப்பிலிட்டுக் கொளுத்தி விடுதலே வேண்டுமென, எல்லார் அறிவினுந் தம்மறிவையே பெரிதாகக் கருதி இறுமாந்திருக்கும் இஞ்ஞான்றைச் சீர்திருத்தக்காரர் சிலர் புகலா நிற்கின்றனர். இவர் தந் துணிவுரைகள் மக்கள் மனப் பான்மையினைச் சிறிதாயினும் உணர்ந்துபாராக் குறைபாடு டையனவாதலால், அவை மக்களுக்குப் பெருந்தீங்கு பயப்பன வாகும். இனிக், கதைகள் எல்லாம் பொய்யும் புளுகு மே நிறைந்தன என்று சொல்லும் அவர் கூற்று உண்மையன்று. ஏனென்றாற், கதைகளின் அமைப்புப் பலதிறப்பட்டதாகும். சில கதைகள் உண்மையாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளையே திறம்பட அமைத்து, அவற்றின் வாயிலாக அரிய வாயிலாக அரிய உண்மைகளை உணர்த்துவனவாகும்; இவ்வகையிற் சேர்ந்த காவியங்கள்: சிலப்பதிகாரம், பெரிய புராணமாகும். வேறு சில கதைகள் உண்மையாக நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளை வைத்து மற்றுஞ்சில புனைவுகள் கூட்டி உயர்ந்த உண்மைகளை உணர்த்துவன வாகும்; இவ்வகையிற் சேர்ந்தவை: மணிமேகலையும், ஓமர் எழுதிய கிரேக்க காவியங்களுமாகும். ஒருகாலத்தில் கிரேக்க காவியங்களிற் சொல்லப்பட்டவை முற்றும் பொய்யென நினைந்த ஆசிரியர்கள், பின்னர் நிலத்தின் கீழ்ப் புதைந்து கிடந்த பண்டைக்கால அரண்மனைகளைக் கிளறிக்கண்ட ஆராய்ச்சி யிலிருந்து அக் காவியங்களின் முதன்மையான பகுதி உண்மையே யென்றும், அதனொடு பிற்சேர்க்கையாய் வந்தவைகளே புனைவுகளென்றும் அறிந்து

க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/295&oldid=1587402" இலிருந்து மீள்விக்கப்பட்டது