உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263

  • கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா மகிழ்வாராயினர். இன்னுஞ் சில கதைகள் முற்றும் நடவாத நிகழ்ச்சிகளை நடந்தனபோல் வைத்துப் பலவாறு அவை தம்மைப் புனைந்து உரைப்பன வாகும்; இவ்வகையிற் சேர்ந்தவை: சூளாமணி, சிந்தாமணி, முதலிய செந்தமிழ்க் காப்பியங்களும், வடமொழியிற் பிற்காலத் தெழுந்த சைவ வைணவ புராணங்களும், தலபுராணங் களுமாகும். இனி, மற்றுஞ் சில கதைகள் கடவுள் நிலை, உயிர் நிலை, மலங்களின் நிலை என்னும் மெய்ம்மைகளை உருவக வகையாற் பலபடப் புனைந்து உரைப்பனவாகும்; இவ்வகையிற் சேர்ந்தன: மிகப்பழைய சைவபுராணங்களும், பிரபுலிங்கலீலை, பிரபோத சந்திரோதய நாடகம் முதலியனவும் ஆகும்.

இங்ஙனம் இந் ந்

நால்வகையில் அமைக்கப்படுங் கதைகளின் கூறுபாடுகளை நம் ஆசிரியர்கள் முன்னரே நன்கறிந்திருக்கின்றனர். இது, சிலப்பதிகார அரங்கேற்று காதையின் உரையில், உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இந் நால்வகைக் கதையமைப்புகளையும் “உள்ளோன் தலைவனாக உள்ளதோர் பொருண் மேற் செய்தலும், இல்லோன் தலைவ னாக உள்ளதோர் பொருண் மேற் செய்தலும் உள்ளோன் தலைவனாக ல்லதோர் பொருண்மேற் செய்தலும், ல்லோன் தலைவனாக இல்லதோர் பொருண் மேற் செய்தலும்” என நால்வகைப் படுத்து அடக்கினமை கொண்டு நன்கு உணரப்படும். இவ்வாற்றால் நம் முன்னாசிரியர்கள் எல்லாக் கதைகளையும் மெய்யெனவாவது பொய்யென வாவது கொள்ளாமல், மெய்யை மெய்யென்றும் பொய்யைப் பொய்யென்றும் பகுத்தறிந்து ஒழுகினார்க ளென்பது இனிது புலனாகின்ற தன்றோ? மற்று, இக் காலத்த வரோ ஆழ்ந்த கல்வியும் உண்மையாராயும் அறிவும் உடைய ரல்லாமையால் எல்லாக் கதைகளையும் மெய்யென்று குருட்டுத் தனமாய் நம்பிக் கைக்கொள்வாரும், அல்லது அங்ஙனமே குருட்டுத் தனமாய் எல்லாக் கதைகளையும் பொய்யென்று இகழ்ந்து ஒதுக்கு வாருமாய்ப் பிளவுபட்டு நிற்கின்றனர். எனவே, புராண கதைகள் எல்லாவற்றையும் ஒருங்கே மெய்யென நம்புதலும் அல்லதவற்றை ஒருங்கே பொய்யென இகழ்தலும் உண்மை யறிவு பெறவேண்டுவார்க்கு ஒரு சிறிதும் இசை யாமையால், இப்போது வழங்குங் கதைகள் பலவற்றுள் உண்மை யாவன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/296&oldid=1587403" இலிருந்து மீள்விக்கப்பட்டது