உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265

13. தக்கன் வேள்வி அழித்த கதையின் உண்மையும் பொய்ம்மையும்

பண்டைக் காலத்திருந்த அறிவான்மிக்க சான்றோர்கள், பிறப்பு, இறப்பு இல்லா எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளைச் சிவம் என்னும் பெயரால் வைத்து வணங்கியும் வாழ்த்தியும் வந்த வரலாற்றினை மேலே நன்குவிரித்து விளக்கி இருக்கின்றாம். இங்ஙனம் அச் சிவத்தை வழிபட்டுவந்த சான்றோர்கள், அச் சிவத்துக்கு மாறாகச் சிறு தேவர்களை வணங்கி, அவர் பொருட்டு வெறியாட்டுவேள்விகளெடுத்த ஆரியரின் ஒழுக லாறுகள், பொதுமக்களுக்குப் பெருந் தீங்குபயப்பன வாயிருத் தலை உணர்ந்து, சிவ வணக்கமே நன்மை பயத்தலும் சிவத்துக்கு மாறாகச் செய்யுஞ் சிறுதெய்வ வணக்கம் அதனைச் செய் வார்க்கும் பிறர்க்குந் தீங்குபயத்தலும் பொதுமக்களுக்குத் தெளி வாக உணர்த்தும் பொருட்டே தக்கன்வேள்வி யழித்த கதையை அமைத்து வைத்தார்கள். தக்கன் என்னும் ஓர் அரசன் ஆரியர் வலையிற் சிக்கி, அவர் வணங்கிய இந்திரன் முதலான சிறு தெய்வங்களைத் தானும் வணங்கி, அத் தெய்வங்களுக்கு ஊனுங் கள்ளும் படைத்தற்பொருட்டு அவ் வாரியர் சொல் வழியே சிவபிரானை இகழ்ந்து பெரியதொரு வெறியாட்டு வேள்வி எடுத்தான். எடுக்க, அதனையுணர்ந்த சிவபிரானடியவரான வீரபத்திரரென்னும் பேராற்றல்மிக்க ஒரு முனிவர் பெருமான், அவன் செய்த வேள்வியினைத் தகர்த்து அவனுக்கு நல்லறிவு வருவித்தார்; என்னும் அத்துணையே அக் கதையாகும். 2 இவ்வளவே பழைய எசுர்வேத தைத்திரிய சங்கிதையிலும் சதபதபிராமணத்திலும் மகாபாரதத்திலும் சொல்லப் பட்டிருக்கின்றது. இப் பழநூல்களிற் கூறப்பட்ட அளவில் இக் கதையின்கண் கடவுள்நிலைக்கு மாறானது ஏதுங் காணப் படுகின்றிலது. ஆனால், அந்நூல்களுக்குப் பல்லாயிர ஆண்டு

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/298&oldid=1587405" இலிருந்து மீள்விக்கப்பட்டது