உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

❖ 21❖ மறைமலையம் – 21

பூண்டு

கட்குப் பின்னெழுதப்பட்ட கந்தபுராணத்திலோ கடவுள் நிலைக்கு மாறான பல புதுக்குறிப்புகள் புகுத்தப்பட்டிருக் கின்றன. சிவபிரான்றன் அருள்வடிவான உமையம்மையார் தக்கனுக்கு மகளாய்ப் பிறந்தனளென்றும்; அம் மகளைச் சிவபிரான் மணந்து கொண்டனரென்றும்; 'பிறர் அருவருக்கத் தக்க எலும்பையும் பாம்பையும் மாலையாகப் புலித்தோல் உடுத்துக் கையில் மண்டையோடு தாங்கித் தேவர்கள்பால் ஐயம் ஏற்று உழல்பவராகலின், அவரை யான் எனக்கு மருமகனாகக் கருதேன்' என்று இகழ்ந்து அவரையும் அவர்தம் மனைவி யாரான அம்மையையுந் தக்கன் தான் செய்த வேள்விக்கு வருவித்தில னென்றும்; தன் தந்தை செய்த இவ் விகழ்ச்சியினால் அம்மை மனம் வருந்தித் தானாகவே தக்கன் அரண்மனைக்கு வலிய வந்தனளென்றும்; வந்த அவளைக் கண்டு தக்கன் வெகுண்டு ‘நீ சிவன் மனைவி யாதலின் என் வேள்வியைப் பார்த்தற்குத் தகுதியுடையையல்லை; நின் கணவனும் எனக்கு மருமகன் அல்லன்; நீ என் புதல்வியும் அல்லை; உன் கணவனுக்குச் சிறந்த அவிசைக் கொடுப் பேனல்லேன்; ஆதலின், நீ பேசாது போய்விடு என்று கடிந்து காண்ட னனென்றும்; இவ்வாறு தக்கன் இகழ்ந்த இகழ்ச்சியுரைகளைத் தெரிந்து கொண்ட சிவபிரான் தக்கன் மேற் பெருஞ்சினங் கொண்டு தன் மகனான வீரபத்திரனை யேவ, அவன் தக்கனது வேள்விக் களத்திற் போந்து அங்கிருந்த தேவர்களையுந் தக்கனையுஞ் சின்னபின்னமாகச் சிதற அடித்து, அவ் வேள்வியினை அழித்தனனென்றும்; கந்தபுராணம் கட்டிச் சொல்லுகின்றது. கந்தபுராணம் கூறும் அக்குறிப்புகள் அத்தனையும் பழைய எசுர்வேதத்திலும் சதபதபிராமணத்தி லுங் காணப்படாமையின், அவை பின் வந்த குறும்பர்களாற் புதிது சோர்க்கப்பட்டன வேயல்லாமற் பழைய சான்றோர் களால் அமைக்கப்பட்டன அல்ல என்பது எவர்க்கும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளிதின் விளங்கா நிற்கும்.

நீ

பாருங்கள் அன்பர்களே! இப் புதுக் கந்தபுராணப் புளுகுகள், முழுமுதுற் கடவுளான சிவத்தின் நிலைக்கு எவ்வளவு மாறுபட்டனவா யிருக்கின்றன! சிவமும் சிவத்தின் அருள் வடிவமான அம்மையும் பிறப்பு இறப்பில்லா முழு முதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/299&oldid=1587406" இலிருந்து மீள்விக்கப்பட்டது