உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

களாகும்.

தள

ம்

267

ங்ஙனமிருக்க, இரக்கமில்லா வன்நெஞ்சக் கொடிய னாகிய தக்கனுக்கு அம்மையார் மகளாய்ப் பிறந்தன ளென்பது யாங்ஙனம் பொருந்தும்? பிறவாத அருள் வடிவில் நிற்கும் அம்மை இருவினையிற் பட்டுழலும் எம் போல் ஊனுடம்பிற் புகுந்து பிறத்தல் கூடுமோ சொன்மின்கள்! நம் சைவ சித்தாந்தத்தின் முதற்பெருங் கொள்கையாவது: இறைவன் பிறப்பு இறப்பில்லான் என்பதேயன்றோ? மாணிக்கவாசகப் பெருமான் “தாயுமிலி தந்தையிலி தான்றனியன் காணேடி என்று அருளிச் செய்ததனையுந், திருஞானசம்பந்தப் பெருமான் 'தந்தையாரொடு தாயிலர் தம்மையே, சிந்தியா எழுவார்வினை தீர்ப்பரால்” என்று அருளிச் செய்ததனையும் உற்று நோக்கு மின்கள்! இறைவன் எங்ஙனம் பிறப்பிறப் பில்லானாய்த் தூய அறிவுவடிவாய் இருக்கின்றனனோ, அங்ஙனமே அம்மையும் பிறப்பு இறப்பு இல்லாளாய் அவனின்வேறின்றி அருள் வடிவாய் நிற்பள். இவ்வுண்மை, சைவ சித்தாந்த நூலாகிய திருக்களிற்றுப் படியாரில்,

66

6

“பொன்னிறங் கட்டியினும் பூணினும் நின்றாற்போல்

அந்நிறம் அண்ணலும் அம்பிகையும்-செந்நிறத்தள் எந்நிறத்த ளாயிருப்பள் எங்கள் சிவபதியும் அந்நிறத்த னாயிருப்ப னாங்கு."

என்றும், சிவஞான சித்தியாரில்,

"மாயைதான் மலத்தைப்பற்றி வருவதோர் வடிவ மாகும் ஆயஆ ணவம் அறிவொடு தொழிலை ஆர்க்கும் நாயகன் எல்லா ஞானத் தொழில்முதல் நண்ண லாலே காயமோ மாயையன்று காண்பது சத்தி தன்னால், “வரும்வடி வெல்லாஞ் சத்தி சத்திதான் மரமுங் காழ்ப்பும் இருமையும் போல மன்னிச் சிவத்தினோ டியைந்து நிற்கும்.” “யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர் மற்றுஅத்தெய் வங்கள் வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும் ஆதலால் இவையிலாதான் அறிந்து அருள் செய்வ னன்றே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/300&oldid=1587407" இலிருந்து மீள்விக்கப்பட்டது