உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

❖ 21❖ மறைமலையம் – 21

என்றும் நன்கெடுத்து வலியுறுத்தப்பட்டமை காண்க. இங்ஙனம் வலியுறுத்தப்பட்ட இச் சைவ சித்தாந்தப் பேர் உண்மைக்கு முழுமாறாக, முழுமுதற் றெய்வமாகிய சிவசத்தியே தக்கனுக்கு மகளாய்ப் பிறந்தனளென்று சைவ சித்தாந்தம் நன்குணர்ந்த எந்த அறிஞனேனுங் கூறத் துணிவனோ சான் மின்கள்! அல்லாமலும், எல்லாம் வல்ல அம்மையை அவன் மகளாகப் பெற்றது உண்மையாயின், அவன் எவ்வளவு தவமும் எவ்வளவு மெய்யுணர்வும் எவ்வளவு அன்பும் உடையவனா யிருந்திருக்க வேண்டும்! அங்ஙனமின்றி, முழுமுதற் கடவுளாகிய சிவத்தின் முதன்மையையும் அம்மையின் அருமையையுஞ் சிறிதும் அறியாது, அவர் தம்மை இகழ்ந்துரைத்தான் என்பத னால் அவன் அம்மையை மகளாகப் பெறுந் தகுதியுடைய னல்லன் என்பது புலனாகின்றதன்றோ! இன்னும், அவன் கூறிய இகழ்ச்சியுரையைக் கேட்டுச் சிவபிரான் தம் புதல்வராகிய வீரபத்திரரையேவி, அவனையும் அவன் வேள்வியையும் பாழ்படுத்தினரென்பதுங் கடவுளிலக் கணத்துக்கு மாறாய்க் காணப்படுகின்றது. ஏனென்றால், எல்லா ஆற்றலும் எல்லா அறிவும் எல்லா முதன்மையும் இயல்பாகவே உடைய இறைவனைச் சிற்றறிவும் சிறுவாணாளுமுடைய எம்மனோர் இகழ்ந்து பேசுதலால் அவற்கு ஏதேனுங் குறைபாடு வந்து விடுமோ? அன்றி அவனை எம்மனோர் புகழ்ந்து பேசுதலால் முன்னில்லாத பெருமை அவற்கு வந்துவிடுமோ? மாய்ந்து போம் மக்களின் இழிவுரைகளைக் கேட்டு, அவன் மனம் வருந்துதலும், அவர் தம் புகழுரைகளைக் கேட்டு அவன் மனம் மகிழ்தலும் உண்டுகொலோ! கடவுள் வேண்டுதல் வேண்டாமையிலான் என்பதை அறியாதார் யார்! ஆதலால், தக்கன் கூறிய இகழ்ச்சியுரைகளைக் கேட்டுச் சிவபிரான் மனம்வருந்தி அவனை மாய்ப்பதற்கு வீரபத்திரரை ஏவினா னென்பது சிறிதும் பாருந்தாது. இஞ்ஞான்று உள்ளாரிற் பலர் தக்கனிலுங் காடுமையாகச் சிவபிரானை இகழ்ந்து பேசா நிற்க, அவ்விகழ்ச்சிகளையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணி அவர்களை அழிப்பதற்கு வீரபத்திரரை அடிக்கடி ஏவுகின் றனனா? சிறிதுமில்லையே. இகழ்வாரும் புகழ்வாரும் இந் நிலவுலகத்திருக்க, அவர்களெல்லார்க்கும் பொதுமையனா யன்றோ இறைவன் இருக்கக் காண்கின்றோம். ஐயனை இகழ்வார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/301&oldid=1587408" இலிருந்து மீள்விக்கப்பட்டது