உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269

  • கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா தமக்குத் தாமாகவே தீங்கு தேடிக் கொள்ளுகின்றன ரல்லாமல், ஐயனே அவர்கட்குத் தீங்கு செய்கின்றிலன் என்பதும், அங்ஙனமே அவனைப் புகழ்வாருந் தமக்குத் தாமாகவே நன்மை தேடீக் கொள்கின்றனரல்லாமல், அவர் புகழ்ச்சிக்கு உவந்து ஏமாந்து அவர் வேண்டியவைகளை யெல்லாங் கொடுக்கின்றில னன்பதும் மெய்யுணர்வினர் நன்கு அறிந்தனவேயாம். ஆகவே சிவபிரான் தக்கன் இகழ்ந்ததைக் கேட்டு வெகுண்டு வீர பத்திரரை ஏவினானென்பது எட்டு ணையுங் கொள்ளற் பாற்றன்று. ஆகவே, இக் கதையின் உண்மை யாதென்றால் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளையன்றி வேறெதனையும் வணங்காத பண்டைத் தமிழ்ச் சான்றோர்க்கு மாறாய் ஆரியர் வலைப்பட்ட தக்கன் என்பான் ஒருவர் புரிந்த வெறியாட்டு வேள்வியை அத் தமிழ்ச் சான்றோரில் ஒருவர் அழித்தொழிந்தார் என்பதேயாகும்.

இங்ஙனமே தாருகாவனத்தில் இருந்த ஆரியக் குருக்கள் மார் முழுமுதற்கடவுளை இகழ்ந்து ஆற்றிய வெறியாட்டு வேள்வியினையும், ஆற்றலிற் சிறந்த தமிழ் முனிவர் ஒருவர் சென்று அழித்தமையும் நினைவு கூரற்பாற்று. இவ்வாறெல்லாம் ஆரியர் எடுத்த இரக்கமற்ற வெறியாட்டு வேள்விகளைச் சிவனடியார்களான தமிழ்முனிவர்களுந் தமிழ் வேந்தர்களும் அழித்த நிகழ்ச்சிகளையே சிவபிரான் செய்தனவாகப் புராண நூல் எழுதினோர் கதைகள் கட்டி வைத்தனர். அங்ஙனம் முதலிற் சுருக்கமாய்க் கட்டிவைத்த கதைகளை, வரவரப் பெருக்கி யெழுதிய பின்னவர்கள், கடவுளிலக்கணங்களை நன்காராய்ந்து பார்க்கும் அறிவாற்றலில்லாமையால், அவ் விலக்கணங்களுக்கு மாறான பலவற்றையுஞ் சேர்த்து விடுவாராயினர். சைவ சித்தாந்த உணர்ச்சியில்லாத சைவர் களும் இன்னோரன்ன கதைகள் கடவுளிலக்கணத்திற்கு முற்றும் மாறாயிருந்தும், அவை சைவ புராணங்களென்னும் பெயரால் வழங்குதல் பற்றி அவை தம்மை முன்பின் ஆய்ந்து பாராமல் முற்றும் உண்மையாகவே நம்பி வருகின்றனர். இதனால் 6 சைவசமயத்துக்கு வந்த 6 வந்த கேடுகள் மெய்யுணர்விற் சிறந்த ஆராய்ச்சி வல்லுநர்கள், போலிச் சைவர்கள் கூறும் இப் பாழுங்கதைககைக் கேட்டாற் சைவத்தைப் பழியாது ஒழிவரோ? ஆகவே சிவபிரான்

உண்மையான

பல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/302&oldid=1587409" இலிருந்து மீள்விக்கப்பட்டது