உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxix

நூலுரை

1929 இல் முதல் பதிப்பாக வெளிப்பட்டது இந்நூல். அடிகளாரின் ஆங்கில முன்னுரை உடையது.

கதை கேட்கும் விருப்பம் கற்றார் கல்லார் அனைவருக்கும் இருத்தலால், கடவுள் உண்மை, உயிர் உண்மை, தளையுண்மை, ஒழுகலாற்றுண்மை, அறம் பாவங்களின் உண்மை ஆயவற்றை இயற்கை உண்மை அறிவுக்கு மாறுபடாமல் அடிகளாரால் படைக்கப்பட்டது என்பது ரண்டாம் பதிப்பின் (1957) பதிப்புரை.

அக்கதை நுட்பம் அறியா ஆரியர் அக்கதையை மனம்போல் எல்லாம் விரித்துக் கண்மூடித் தனத்தைப் பெருக்கிவிட்டமை கடவுள் நிலைக்கு மாறானது என்பதை விளக்குவதே இந்நூலாம்.

இதில் பிறவி எடுத்ததன்நோக்கம் முதலாக முடிவுரை ஈறாக 21 குறுங்கட்டுரைகள் உள. திருச்சிராப்பள்ளி சைவசித்தாந்த சபையின் ஆண்டுவிழாவில் பொழிந்த பொழிவு நூலாகும் இது.

அறியாமை நீக்கமும் அறிவுப்பேறு அடைதலும் பிறவி நோக்கு என்பதை முதற்கண் விளக்கி, கடவுள் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் நிலையினது என்று கூறுகிறார். உலகையும் உயிர்களையும் கடந்துநிற்பது என விளக்கம் தருகிறார்.

தவம் என்பது உயர்ந்த பொருளில் நமது கருத்தை ஒருமுகப்படுத்தி உறைந்து நிற்றல் என்பதையும்,

ஐந்து முதற் பொருள்களில் அடங்கி நிற்பது உலகம் என்பதையும், பிறவா இறவாப் பெற்றியது கடவுள் என்பதையும், கடவுள் எங்கும் என்றும் இருப்பவர் என்பதால் மாந்தர்க்கு ஒழுக்க நிலை அமைவதையும், தக்கன் வேள்வி அழிப்பு என்னும் கதை சிறுதெய்வ வழிபாட்டை நீக்குவது என்பதையும், அம்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/30&oldid=1587137" இலிருந்து மீள்விக்கப்பட்டது