உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXX

மறைமலையம் – 21

10

தக்கன் மகள் என்பது எண்ணத் தக்கது என்பதையும், பிள்ளையார் பற்றிய கதைகள் அருவருக்கத் தக்க கதை என்பதையும், அவ்வாறே கந்தன் பிறப்புக் கதையும் எள்ளத் தக்கதே என்பதையும், பகலவன் விளக்கமே சிவம், செவ்வேள் என்பதையும், காலை மணிவரையும், பகல் 2 மணிவரையும், மாலை 6 மணிவரையும் கதிர் ஒளி செய்வதே திருமால் மூவடியால் உலகளந்த கதை என்பதையும், கதிர்வரவை அறிவிக்கும் சேவலே முருகன் கொடி என்பதையும் விளக்குவது இந்நூலாம். இவற்றைப் போலிமை வயப்பட்ட சைவமும், புனைகதைப் புரட்டரும் ஏற்பது எளிதாமா? அடிகள் தெளிவும் உறுதிப்பாடும் இப்படிப் பொழியச் செய்தமை அந்நாளில் பெரும் புரட்சியாம்.

இரா. இளங்குமரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/31&oldid=1587138" இலிருந்து மீள்விக்கப்பட்டது