உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீஜ்ஞானசம்பந்தகுருப்யோநம:

சோமசுந்தரக்காஞ்சி

“வைதிக சைவசித்தாந்த சண்டமாருதம்” ஸ்ரீஸ்ரீ-சோமசுந்தர நாயகரவர்கள்மே லியற்றிய

கையறு நிலை

சைவமெனப் படுசமய நலுண்மை தழைந்து செழித்திடவோ தாவறுநீ திவழிப்படு வாதிகள் சார்ந்து களித்திடவோ மெய்வழி பொய்வழி வேறுவேறாக விரிந்து விளங்கிடவோ வேதவே தாந்தவரம் பினியார்க்கும் விளங்க விளம்பிடவோ தெய்வமினிச் சிவமென்று தெளிந்து லகிங்கு திகழ்ந்திடவோ

திப்பிய மெய்யருளிப் புவிவந்து சிறந்த திறம்படவோ துய்யவெண் ணீறுதுதைந்த தொழும்பர் கடன்மை சுடர்ந்திடவோ சோமசுந்தர னெனுநாம மொடிங்குநீ தோன்றிய தெங்குருவே புத்தர்கரைந் திடுபொய்ம் மொழிகீழ்ந்த துபோதுவ தன்றென்றோ

புன்சமணுக் கொருவன் கழுவீந்ததும் போதுவ தன்றென்றோ சுத்தசைவத் தொடுமுரணி யிழிப்புரை தோற்றுந ருண்டென்றோ

சொல்வழி வாரலர்நல் வழிகண்டு துலங்குக வின்றென்றோ பித்துரை யாடுநரத் திறந்தீர்ந்து பிழைத்திட லொன்றென்றோ பேதுரை கூறுநர்வா துரைபோழ்ந்து பிறங்குவ தின்றென்றோ தொத்தலர் கொன்றையினான் புகழின்று தொடங்குது நன்றென்றோ

சோமசுந்தர னெனுநாம மொடிங்குநீ தோன்றிய தெங்குருவே.

(1)

(2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/38&oldid=1587145" இலிருந்து மீள்விக்கப்பட்டது