உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மறைமலையம் – 21

வான்மதி மீனினநீங்க வழுக்கியிம் மண்ணிடை வீழ்ந்ததுவோ மல்லலங் கற்பமரஞ் சிவம்வீசியிம் மண்ணிடை வீழ்ந்ததுவோ நான்முக னான்மறையுட் பொருள்கூற நலத்தக வந்ததுவோ

நல்லகல்லா லமர்நம்பர் கைகாட்டுரை நாட்டவெ ழுந்ததுவோ மான்மக ணாமகடூ மகள்கூடி வளந்தர வந்ததுவோ

மாதவவாழ் வொடுமில்வினை காட்டிட வள்ளுவர் வந்ததுவோ சூன்முதிர் வண்புயனூன் முறைதந்து சுரந்திட வந்ததுவோ சோமசுந்தர னெனூநாம மொடிங்குநீ தோன்றிய தெங்குருவே

நாயினிழிந் தவெம்புன்மை களைந்து நலந்தர வந்தனையோ

நல்லது தீயது நன்றுபகுத்து நவின்றிட வந்தனையோ தாயினுமென் னுயர்தந்தை யினும்முயர் தன்மையில் வந்தனையோ தண்டமிழிற் படுவண்டுறை நன்றுநீ தந்திட வந்தனையோ காயினுமல் லதுவப்பினு மன்பது காட்டிட வந்தனையோ

(3)

கன்மனமி யாவுமொர்நன் மனமாயெமைக் காத்திட வந்தனையோ தூயவுளத் தினர்சாம்பவ ரென்பது தோற்றிட வந்தனையோ சோமசுந்தர னெனுநாம மொடிங்குநீ தோன்றிய தெங்குருவே.

(4)

கண்ணுதலார் நெறிபண்ணின மொண்கழல் காணுது மினியென்றோ கௌணியர்தந் தலைவன் கழல்கண்டு களிக்குது மினியென்றோ எண்ணிலரன் பர்முனண் ணியநல்வழி யேகுது மினியென்றோ

ஈசனற்றொண் டர்குழீஇய வெள்வெற்பி லிருக்குது மினியென்றோ மண்ணில்வரும் பொருடுய்த் துறைவாழ்வு மதித்தில மினியென்றோ

மன்னரிறைஞ் சவரும்பெரு வாழ்வு மயங்கு வகைத்தென்றோ துண்ணெனவிவ் வுலகம் முதலென்று சுருங்குத லறிமென்றோ சோமசுந்தர னெனுநாமம் விடுத்து மறைந்தனை யெங்குருவே.

இங்கினிநின் கழல்கண் டிருகண் களுமின் புறலாகாதே

ஏழையமுய் யமிழற்று நினின்னிசை யெய்துவ தாகாதே செங்குமுதம் புரைநின் றிருவாய்மொழி சேர்வது மாகாதே செம்மைதரும் முபதேச வழக்கினித் தேர்ந்திட லாகாதே கொங்கலர் கொன்றையினான் றிறமிங்கு குறிப்பது மாகாதே குன்றலிலன் பர்குணங் குறியிங்கு குறிக்கொள லாகாதே

(5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/39&oldid=1587146" இலிருந்து மீள்விக்கப்பட்டது