உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

துங்கநலா கமநுட்ப முணர்ந்து சுகம்பெற லாகாதே சோமசுந்தர னெனநா முரையண்ண றுறந்து மறைந்திடவே.

குன்றிவிழிக் குயில்கா ளுயிரன்னவெங் கோவினைக் கண்டனீரோ கூம்புசிறைக் குருகே குருமாமணி கோலநீர் கண்டனிரோ பொன்றுகள்சிந் திடுகொன்றை களேசிவ போதனைக் கண்டனிரோ புந்திநிறைந் தவர்சிந்தை விளக்கினைப் புன்னையே கண்டனிரோ கன்றுமுளத் தொடுகண் கலுழெந்துயர் கண்டுரை யாடிரோ

Π

7

(6)

கைலைமலைத் தலைவன் கழல்வைகினற் கண்டது சொல்லீரோ துன்றுமெமெந் தையையென் றினிக்காண்குவந் தோகையே கூறீரோ சோமசுந்தர னெனுநாம னைக்கண்டு தொடர்ந்துசொ றூதுணமே. (7) வேதமொடா கமவித்தக நூல்கள் விரிந்து விளங்கிடுமோ வென்றவெண் ணீற்றொளி யிந்நிலமெங்கும் விரிந்து பரந்திடுமோ தீதறுநால்வர் திறம்படு மன்பு திகழ்ந்து சிறந்திடுமோ

தேறருமெய்ப் பொருள்கண்ட வர்நூல்க டெளிந்து சிறந்திடுமோ மேதகவாக மொழிந்திட வல்லதொர் மெல்லியற் பைங்கிளியே மெல்லென விவ்வுரை யாவுமவற்கு விரித்து விளம்பிடினே தூதொடுவந் தநினின்மழ லைம்மொழி தூயதெனக் கொண்டே சோமசுந்தர னிவணாமுறு துன்பறத் தோன்றுவ னெம்முளமே.

தாபதநிலை

(8)

அரைசே யெனுமா லருளே யெனுமால்

உரைசேர் புகழா யுடையா யெனுமால்

தரைநீ யொருவ றகுமோ வெனுமால்

குருவே யெனுமால் குணநின் மனையே.

(1)

சிவமே கருதுந் திறலோ யெனுமால்

அவநீ யெமைநீ யகலல் லெனுமால் தவமே திருவே தலைவா வெனுமால்

குவிகை தொழுமாற் குணநின் மனையே.

(2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/40&oldid=1587147" இலிருந்து மீள்விக்கப்பட்டது