உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

மறைமலையம் – 21

அறிவோ பிறழு மலமந் தழுநின் குறியும் பிறவுங் குலவும் முளமே செறியா தொருவுந் திறமோ தெரியா

தெறியுங் கரமே யிவணென் செயுமே.

(3)

எழிலார் மதியம் மியைநின் முகனே யழியா துளமே யடையும் மெனுமால் வழியா விழுதேன் வளர்நின் மொழியே பழியே மினியோ பருகல் லெனுமால்.

உயிரே யுறவே யுலகாற் சிவநற் பயிரே தழையப் படுநன் முகிலே யெயிலார் புறவத் திளையார் திறமே பயில்வாய் தகுமோ பழியார் பிரிவே.

மறைநா வுடையாய் மறையோர் புகழ நிறையா ருரைக ணிரைப்பா யெனுமால் குறையா மதியாய் குணமா மலையே யிறையே பிரிய விரெனா னெனுமால்.

(4)

(5)

(6)

கரவோ வறியாய் கணமும் பிரியாய் உரவோய் பிரிதல் கரவோ வுரையாய் அரவே ரிறைவ னடியே யுறைவாய்

விரவுந் திறமோ விரியா யெனுமால்.

(7)

கடலோ கரையுங் கருங்கல் லுருகு மடலார் மலர்க்கண் மலிநீர் சொரிய மிடலார் மரமும் மெழுகா யுருகும் அடலே றனையா யறியா யிதுவோ.

அருமை மகனை யகன்றா யெனுமால் திருவை நிகருஞ் சிறுமி யரையு

மொருவா வுறைத லுறுமோ வெனுமால்

(8)

பெருமா பிரியப் பெறுமோ வெனுமால்.

(9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/41&oldid=1587148" இலிருந்து மீள்விக்கப்பட்டது