உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

மொழியப் படுமோ முனிவா மனையின்

கழியாத் துயரங் கருத லரிதால்

அழியாப் புகழென் னனையின் றுயர

மொழியா யெனயா னுனைவேண் டுவெனே.

மன்னைக் காஞ்சி

வாங்குகடல் குழிப்ப வண்புனன் முகந்து

பாங்குபெற வுயரிய வோங்குமலை யேறி

மன்னுயி ரஞ்ச மின்னுட னுரறி

வரையாது பெய்த மழைக்குலம் போல, மறைநூற் பொருளுந் திருநெறித் தமிழு மரும்பொருள் பயப்ப வொருங்குடன் காட்டி, யுவலைச் சமயிகள் கவலை யெய்தச்

சைவ சித்தாந்த மெய்யொடு கிளர வுரைமுறை நிறுத்தனை பலநாண் மற்றஃ தழுந்துதுயர் கூரக் கழிந்தன்று மன்னே, நீறினி தளைஇய வீறின தாகி

யகன்றுநிவந் தொழுகிப் பரந்தநின் னுதலுங் கருகி முரிந்த திருவளர் புருவமும் பேரரு ணிரம்பு சீர்கெழு விழியு

முல்லை முகிழன்ன மெல்லிய நாசியுங் கொவ்வை யன்ன செவ்விய விதழு முருந்தி னன்ன திருந்திய வெயிறு நவையறு கன்னற் சுவையின தாகிக் குயிலிசை யோடு பயிலுத லுடைத்தாய்க் காணினுங் கேட்பினும் கருதினுங் களிதரு' முரையொடு பயின்ற புரையறு மொழியுஞ் செறிவோடு தசைந்த நறுவிய கதுப்புங் கத்தரிக் கொழுங்கடை யொத்திடு செவியுஞ்

9

(10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/42&oldid=1587149" இலிருந்து மீள்விக்கப்பட்டது