உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

மறைமலையம் – 21

சுரிவளை போல வரியொடு திரண்டு

பூதிமணி திகழுந் தீதறு மிடறு

மெழுவெனத் திணிந்து முழவெனச் சரிந்துபின் னெழிலொடு கிளருங் கொழுவிய தோளு நான்முக னறியா வான்பொருள் வழக்கு முரைமுடிவு கடந்த விருபொருட் கல்வியு மொருவழி யெமக்குத் திருவொடு காட்டும் யாழ்நுனி யோடு வாழ்திருக் கையு நீறு சண்ணித்த நிகரறு மேனியு மருளது நீங்க வருளொடு காட்டி நாயினு மிழிந்த பேயின மாகிய வெம்மையு மாண்ட பின்னை யம்மைப் பண்டைய வுருவொடு சென்றனை மன்னே, நின்னடி சேர்குநர்க் கெல்லா மின்னரு டிரிவின்றிச் செய்குவை மன்னே, மருவலர் நின்முகங் கண்டொன் றிரக்குவ ராயினது து வரையாது வழங்குவை மன்னே, யொருகால் வெகுண்டுரை யாடுவை யெனினு நகையொடு

மெம்முறு விழுமங் களைவோய் மன்னே, தாயினு மெமக்குத் தலையளி புரிந்து தந்தையிற் பெரிய தயவினை மன்னே, காழியில் வந்த கௌணியக் கன்றின்

மிகுத்துரை யெமக்குத் தொகுத்தனை மன்னே, மறைமுடி வெல்லாந் துறைபட நிறுவிக்

குறையற வீந்த குரிசிலை மன்னே,

மண்ணிடை வாழ்வும் விண்ணிடை வாழ்வு

மதியாது வைகிய சிதைவறு திருவினை

சிவன்றிரு வடியே சிவணிய குறிப்பி னவமது களைந்த தவமுறு தன்மையை கட்புலம் படராது விட்புலம் படர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/43&oldid=1587150" இலிருந்து மீள்விக்கப்பட்டது