உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

கண்ணுத றிருவடி நண்ணினை யாயினும்,

பிரிவுறு துன்ப மரிதரி தாகலின்

விழிநீ ருகுப்ப மொழியிடை குழற

வானாத் துயர மடைது மன்றே, குருவே கண்ணே திருவே மணியே

யறிவின் கொழுந்தே பொறையி னிறைவே யெம்முள மமர்ந்த வம்மணி விளக்கே

புகழின் வடிவே பொலிவுறு மமுதே கலையின் றிறனே நிலையுமெ முயிரே யுயிரிடை நிரம்பு செயிரறு முணர்வே யுணர்வுக் குணர்வே யொப்பிலா முதலே யறிவொடு கூடாச் சிறியே முறுதுயர்

பரிவொடு களைமதி யெனநின்

றிருவடி நினைந்தொரு வரம்வேண் டுவலே,

11

திருச்சிற்றம்பலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/44&oldid=1587151" இலிருந்து மீள்விக்கப்பட்டது