உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

திருச்சிற்றம்பலம்

நூலாசிரியர்

முதற்பதிப்பு முகவுரை

எமக்குச் சுத்தாத்துவித வைதிக சைவசித்தாந்த நூற் பொருள் செவியறிவுறுத்தி, இத்தொன்னாடு முழுவதூஉம் அச்சித்தாந்த சைவப்பொருண்மர பெல்லாம் வகுத்தெடுத்துக் காண்டு உபந்நியாசங்களானும் நூல்களானும் பலகாற் பலரு முய்யுமாறு விளங்கக் காட்டி ஓர் அரியேறுபோல யாண்டும் நிகரற் றுலாவிய எங்குவரவர் 'சைவசித்தாந்த சண்டமாருதம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயக வள்ளல் சிவசாயுச்சிய முற்ற ஞான்று, அப்பெருந்தகையார் பிரிவாற்றாது எம்மிடை நிகழ்ந்த கையறவு தெரித்து யாமியற்றிய 'சோமசுந்தரக்காஞ்சி' யின்மேல் ஒருசில போலிப்புலவன்மார் வழுவளைந்த போலி மறுப்பு ஒன்று வெளியிட்டனராக, மற்றதனைக் கண்ட எம் மாணக்கர் ஒருவர் அப்புலவர்க்குப் பொய்யறிவு களைந்து பொருளியன் மெய்யறிவு கொளுத்தல் வேண்டியும், அப் பொருளறிவின் மாட்சி தெரித்தல் வேண்டியும் தருக்க நூலி யைபும் பிரமாண நுட்பங்களு மிடையிடையே கொளுவியொரு கோவைப்படுத்துத் தமது மேற்கோ ளினிது விளங்க வெழுதிய அரியதோரெதிர் மறுப்பினை ‘நாகைநீலலோசனி' ‘பிரபஞ்ச மித்திரன்' ‘தமிழ்ப்பிரதிநிதி' முதலிய பிரபல சஞ்சிகைகளிற் பிரசுரித்தனர். அவ்வெதிர்மறுப்பு நியாய நெறிதழீஇயுரங் கொண்டுலாவுதலி னதனைக் கண்ட அப்புலவன்மார் வாய்வாளா தடங்கினர்.அப்புலவன்மார் இவ்வெதிர்ப்பின் மேல் மறுப்பொன் றெழுதின ரெனவும். அம்மறுப்புப் பிரமாணப் பொருள் காட்டி நிறுவலாற்றாது ‘பிறிது மொழிதல்' என்னுந் தோல்வித் தானத் தோடியைந்து இகழுரை நிரம்ப நிகழ்த்தி மறுப்பட்ட தெனவும் எந்நண்பர் பல ரோடியா மொருங்கிருந்தவழி எம்மெதிரில் ‘தமிழ்ப் பிரதிநிதிப் பத்திராதிபர் கூறினா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/45&oldid=1587152" இலிருந்து மீள்விக்கப்பட்டது