உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

13

ராயினும், அப்போலிமறுப்புத்தானும் இதுகாறும் புறம் போந்திலாமை யின், அவர்வெருட்டுரையை ஒரு பொருட் படுத்துவா மல்லே மென்றொழிக.

-

இனி, இவ்வெதிர் மறுப்பினைப் பத்திரிகையி னின்றும் வேறு பிரித்தெடுத்துப் புத்தக வுருவமாகத் திரட்டிப் பலர்க்கும் பயன்படுமாறு புதுவது சில விரித்தெழுதி வெளியிடுகவென உள்ளுர் வெளியூர்களிலுள்ள நண்பர் பலரும் எம்மைப் பலகாற் கேட்டுக் கொண்டமையானும், அவருள்ளும் ஸ்ரீஸ்ரீ நாயக ரவர்கள் மாணக்கரும் சிவாநுபூதிப் பெருஞ் செல்வம் வாய்ப்பப்பெற்றுச் சிவபெருமான் றிருவடியையன்றிப் பிரி தொன்றைக் கனவினு நினையாத முதிர்ந்த அன்பருமாகிய திண்டிவனம், சூபர் வைஸர் ஸ்ரீமாந்-சிங்காரவேல் ழதலியா ரவர்கள் அதற்கென்றே சில பொருடந்து உபகரித்தமையானும் அதனை யவ்வாறே செய்தற்கு முயல் வேமாயினேம். இதற்கிடையில் நண்பர் ஸ்ரீ வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி யார் தமது ‘ஞானபோதினி’ப் பத்திரிகையில் இதனை வெளி யிட்டு அதன் வாயிலாகச் சுருங்கிய செலவில் புத்தக மாக்கலா மென்றுரைப்ப, அதற்கிசைந்து யாமிதனை வேறுபிரித் தெழுதிக் கொடுப்பவும் அவர் தாமுரைத்தவாறு அப்பத்திரிக்கையி லிதனை வெளியிடாமற் பெரிதுங் காலந்தாழ்க்கச் செய்த மையின், இதனை யவரிடத்தினின்று பெயர்த்தும் வாங்கி வேறு அச்சிடுதற்கு நாளாயிற்று. இதுகிடக்க.

இனி, இந்நூலின்கண் நூற்பொருளாராய்வாரினைய ராதல் வேண்டுமென்பதூஉம், பொருளிலக்கணமாவ திதுவென்ப தூஉம், அப்பொருட்கூறு பாட்டியலினைய தென்பதூஉம், காஞ்சித்திணை, கையறுநிலை, தாபதநிலை, மன்னைக்காஞ்சி முதலியவற்றின் பொருண்மரபு இவ்வாறா மென்பதூஉம், ஆனந்தக்குற்றமென வொன்று கோடல் போலியாமென்ப தூஉம் பிறவு நிறுத்தமுறையானே தந்து விளக்குவாம்.

சென்னை

1901

நா. வே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/46&oldid=1587153" இலிருந்து மீள்விக்கப்பட்டது