உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மூன்றாம் பதிப்பின் முகவுரை

ல்

எமக்குச் சைவசித்தாந்த நுண்பொருள் செவியறிவுறுத்திய ஆசிரியர் சோமசுந்தர நாயகர் சார்வரி ஆண்டு மாசித்திங்கள் 11ஆம் நாள் (1901, பிப்ரவரி 22) வெள்ளிக்கிழமை மாலையிற் சிவபிரான் றிருவடி நீழல் எய்தினர். அவர்களது பிரிவு எமதுளத்தை மிகக்குழைத்து விட்டமையின் அதனை யாற்றாது ‘கையறுநிலை' என்னுந் தலைப்பில் எட்டுச் செய்யுட்களுந், 'தாபதநிலை' என்னுந் தலைப்பிற் பத்துச்செய்யுட்களும், ‘மன்னைக்காஞ்சி' என்னுந் தலைப்பில் அறுபத்தேழடிகள் கொண்ட ஓர் அகவற்செய்யுளும் அடங்கிய ‘சோமசுந்தரக் காஞ்சி' என்னும் இரங்கற்பாமலையை மாசி 23இற் பாடத் துவங்கி, மாசி. 25 இல் அதனை முடித்திட்டேம். பின்னர் அக்காஞ்சியினை ஒரு சிறு நூலாகப் பதிப்பிட்டு, ஆசிரியர்க்கு நீத்தார்கடன் கொண்டாடப்பட்ட16 ஆம் நாளின் மாலையில் அவர்களது இல்லத்தின்கட் கூடிய கற்றார் பேரவையில், மற்றைப் புலவன்மார் தாந்தாம் இயற்றிக் கொணர்ந்த இரங்கற்பாக்களைப் படித்து முடித்தபின், அக்காஞ்சிப் பாக்களைக் கண்ணீர் ஒழுகக் கலுழ்ந்தபடியாய்ப் படித்து முடித்தேம்.ஏனையோர் பாடிய இரங்கற்பாக்கள் உண்மையில் இரங்கற்பாக்களாய் இல்லாமல் ஆசிரியரின் சித்தாந்தப் பேர் உணர்ச்சியினையும், அவர்களின் சொல்லாற்ற லினையும், அவர்களுடன் சமயவழக்கிட்டுத் தோல்வியுற்றார் நிலைகளையுமே பெரும்பாலும் எடுத்தியம்பி அவையிலிருந் தார்க்கு நகையினை யுண்டாக்கின. ஆனால், ஈற்றில் யாம் நெஞ்சங்குழைந்துருகிப் பாடிய இரங்கற்பாக்களோ அனை வரையும் அகங்கரைந்து கண்ணீர் பெருகி அழுமாறு செய்து விட்டன. அதனால், நாயகரவர்களின் மாணவரும் நண்பரும் உறவினரும் பிறருமெல்லாம் எமது காஞ்சியின் உருக்கத்தினை எங்குமே உயர்த்துப்பேசிப் பாராட்டலாயினர். அதுகண்ட புலவன்மார் சிலர் அழுக்காறுற்று, எமது காஞ்சியிற் குற்றங்க

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/47&oldid=1587154" இலிருந்து மீள்விக்கப்பட்டது