உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

15

காணப்புகுந்து அதன்மேல் மறுப்பெழுத, அதற்கெதிர் மறுப்பாக யாம் 'சோமசுந்தரக்காஞ்சியாக்கம்' வெளியிட்ட வரலாறெல்லாம் இந்நூன் முகவுரையிற் காட்டப்பட்டுள்ளன.

எமது

எழுதி முதற்பதிப்பு

காஞ்சியாக்க உரைநூல் தொல்காப்பியப் பொருளிலக்கண நுட்பங்களும் பிறவும் விளங்க விரித்து உயர்ந்த தனித்தமிழ் நடையில் வரையப்பட்டிருத்தலின் தமிழ்கற்பாரும் பிறரும் அதனை விரும்பி வாங்கிப் பயின்றுவர, அதன் முதற்பதிப்புப்படிகள் விரைவிற் செலவாயின. அதன்பின், நெடுங்காலம் இந்நூல் திரும்பப் பதிப்பிடப்படாமலே கிடந்தது. பின்னர், நாகை கோபாலகிருஷ்ணன் என்னும் எம் அருமை மாணவர், தொல்காப்பியம் முதலான பண்டைத் தமிழ்நூல் ஆராய்ச்சி செய்வார்க்கு இந்நூலொரு திறவுகோல் போற் பயன் படுவதாத லுணர்ந்து, எமதுடன்பாடு பெற்று இதனை 1914 ஆம் ஆண்டு தாம் எழுதிய ஒரு முகவுரையுடன் வெளியிட்டு, அந்நூற்படிகளின் வருவாயை எமது நிலையத்திற்கே அன்புடன் உதவினர்.

அதன்பின் அந்நூற்படிகளுஞ்

செலவாய்ப்போக,

அதனைச் சில ஆண்டுகளுக்கு முன்னமே மூன்றாம்பதிப்பாகப் பதிப்பிட்டு முடித்தேம். முடித்தபின் நாயகரவர்களின் அரியவரலாறும் எழுதி அதனுடன் சேர்த்து வெளியிடுவது எமக்கொரு பெருங்கடமையாமெனக் கருதி, நாயகரவர்களின் வராாற்றைச்சென்ற இரண்டாண்டுகளாக எழுதிவருகின்றேம். இதற்கிடையில் மேல்நாடு கீழ்நாடுகளில் இப்போது நடைபெறுங் கொடும்போராற் காகிதம் முதலான அச்சுக் கருவிகளின் விலை ஒன்றுக்குப் பன்மடங்காக ஏறிக்கொண்டே போதலின், இந்நிலையில் நாயகரவர்களின் வரலாற்றை முற்றும் எழுதி அச்சிட்டு வெளியிடுவது இயலாததாய் இருக்கின்றது. ஆதலாற், சோமசுந்தரக்காஞ்சியாக்கத்தை மட்டும் இப்போது வெளியிடலாயினேம். இதன் முதற்பதிப்பிலுள்ள சிற்சில வட சொற்களும் இம்மூன்றாம் பதிப்பில் முழுதுங் களைந்தெடுக்கப் பட்டு, இது முற்றுந் தனித்தமிழாக்கப்பட்டிருககின்றது. எல்லாம்வல்ல சிவபிரான் றிருவருளால் இந்நூலும் எம் மற்றைநூல்களுந் தமிழ்மக்கட்கும் பிறர்க்கும் பெரும்பயன்றருக! பல்லாவரம் 13-12-1941

மறைமலையடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/48&oldid=1587155" இலிருந்து மீள்விக்கப்பட்டது