உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

சோமசுந்தரக்காஞ்சியாக்கம்

நூலாராய்வாரியல்

அறிவைப் பண்படுத்து விளக்கமுறுவிக்க வேண்டு மென்னும் அவாவுடையா ரெல்லார்க்கும் நூலாராய்ச்சி யென்பது இன்றியமையாது வேண்டப்படுந் தலைமை யுடைத் தாம். தாமின்புறுவது குறித்தாயினும், பொருளீட்டியைம் பொறியானு நுகரப்படுவன னிதடைந்து வாழ்வது குறித்தாயினும் பல நூற்பொருளை யுணர்ந்து சேறல் நூலா ராய்ச்சி யாகாது. அல்லது, இந்நிலவுலகிற் பலரும் தம்மைப் புகழ்ந்து நன்குமதித்தலையே குறிக்கொண்டு இரவும் பகலும் ஒருவாது பலவும் பயின்று கோடலே யதுவாமெனி னதுவு மன்று; என்னை? தம்மினுஞ் சிறந்தாரொருவர் புகழ்ப் பெருக்க முற்று வாழ்தலை நினைதொறு மனம் புழுங்கியறிவு திரிந்து மற்றவரொடு மறுதலைப்பட்டு நூற்பொருளைத் திரித்துத் தமக்கு வேண்டியவா றெல்லாங் குற்றங்கூறி யுழிதருவாராகலாற், புகழ் வேண்டுவார் நூற்பொரு ளாராய்ந்தாரெனப்படா ராகலி னன்பது. இங்ஙனம் புகழும் பொருளும் பெறுவது கருதி நூலுணர்ந்தார் நூற்பொருளாராய்ந்தாரெனப்படா ரென்பது தந்து எதிர்மறுப்பவே, மற்றது தம்மறிவு பரந்து விரிந்து திகழு மாறும், தம்மொழுக்கத்தைச் சீருறத் திருத்தி நல்வழிச் செல்லுமாறும், நூற்பொருட் சுவை கண்டு உவக்குமாறு மெல்லாம் வைத்து நடுநிலை திறம்பாது பல நூற்பொருளு நுண்ணிதாக வளந்து ஆராய்ந் துளங்கொளப் பயின்று புலமை நிரப்புவதாம். அது தான் நல்லிசைப் புலவரானும் பிறரானு மியற்றப்பட்டு ஒன்றோ டொன்று தலை மயங்கிக் கிடக்கும் நூற்கலவையுள் நல்லன தெரிந்தெடுத்துக் கோடற்கும் அல்லன வாழிதற்கு முதவுதன்மேலும், நன்மக்கள் பலரானும் வியந்தெடுத்துப் போற்றப்படுவனவாகிய விழுமிய நூலின்கண் நுட்பப்பொரு டேர்ந்து தாமின்புறுதற்கும் பிறரின்புறு வகையான் மற்றவைதம்மை யவர்க்கினிது விளக்குதற்குஞ் சிறந்த கருவியு மாவதாம். இங்ஙனம் நூலாராய்ச்சி செய்வாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/49&oldid=1587156" இலிருந்து மீள்விக்கப்பட்டது