உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

17

வேறே, நூலறிவு கொள்வாரும் வேறே யென்பது உணரற்பாற்று. இனி யிப்பெற்றித்தாகிய நூலாராய்ச்சி செய்ய விரும்புவார்க் கல்லாம் மிகுந்த நுட்பவுணர்வும் பரந்த நூலறிவு முளவாதல் வேண்டும். இந்நூட்ப வுணர்வுதானும் ஒருவர்க்குப் பிறவியிலே யினி தமைவதன்றி யிடையிலே யரும்பி மலர்வதன்று; அஃது ஒருவன் றன்றாய கட்டிற் கருக்கொண்ட வாறே யவனறிவிற் றான் கருக்கொண்டு சிறிது முகிழ்த்துப் பின்னைப் பயிற்சி வயத்தானும் நூற்புலமையானும் முறுக்குடைந்து விரைபரப்பி விரிவாதம். இவ்வருந் தகைமை யியற்கையிலேயே வாய்ப்பப் பெற்றா ரன்றி யேனையோ ரதனை யடைதுமென மேற் கொண்டு புகுதல் பெரிது மிடர்ப்படுதற் கேதுவாமென் றொழிக. நூலாராய்ச்சி யென்ப திவ்வாறெல்லா மமைந்து கிடப்ப, அதனியல்பை ஒருசிறிது முணரமாட்டா ராகிய இ காலத்துப் புலவன்மார் சிலர் நடுநிலையிழந்து நூலாராய்ச்சி செய்யு முகத்தான் மூவேறு வகைப்படுவா ராயினர். அவர்தாம் பொறாமையான் நூலாராய்ச்சி செய்வாரும், புகழ் கருதி நூலாராய்ச்சி செய்வாரும், பகைமையான் நூலாராய்ச்சி செய்வாருமா மென்க.

L

க்

அவருட் பொறாமையான் நூலாராய்ச்சி செய்வார், ஒருவரெழுதிய நூல் பொருணயஞ் செறிந்து சொன்னுட்பம் பொருந்தி நடைகவின்று விளங்குறூஉம் பெற்றிகண்டு தமக்கு அங்ஙனம் வாய்ப்பப்பெறாமையா லுள்ளழுங்கிப் பொறாமை சுடர வெரிந்து தம்மறிவைக் கதுவலின், அதற் காற்றாராய் அப்புலவர் நூலை உண்மையோடு ஆராய்ந்து நலங்கொள மாட்டாமல் அதனுட் குற்றங்கண்டு கூறுவர். இன்பம் பயக்குந் தன்மையவாகிய எல்லாப் பொருள்களும் பொறாமையுடை யார்க்குத் துன்பத்தையே பயக்கும்; பிறரிடத்து அறிய சொற்செயல் காணலுறுவராயின் மகிழாது நிரம்பவும் வருந்துவர். பொறாமையின்றி யிருக்கும் அருந்தகையாளர்க்கு நலந்தருவன பலவும் இக்குணமுடையார்க்குத் தீதுசெய்யு மாயின், என்னே! நாம் உலகியற் பொருளை வெறுக்குமாறு. இடர்ப்படு குழியில் வீழ்ந்து தாந் துன்புறுவதற்கு இவர்தா மன்றே காணர ராயினர். இவர் தங்குறைவை நிறைவு செய்து யாவரிடத்து மன்புடையராய் வாழ வறியாது பிறரைப் புறங்கூறிப் பழித்து வாணாளை வாளாது கழித்த லென்னை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/50&oldid=1587157" இலிருந்து மீள்விக்கப்பட்டது