உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

18

மறைமலையம் – 21

என்னை! தமக்குள்ள குறையினை நிரப்புதல் பிறரைப் பழித்தலானும், தம்மை யளவிறப்பப் புகழ்தலானும், தாங் கல்லாத நூல்களைக் கற்று வல்லார்போன்று ஆரவாரஞ் செய்தலானும், தமக்கில்லாதவற்றை யிருப்பனவாகப் பொய் யுரை கிளந்து பிறரை மயங்கப்படுப்பதனாலு மெய்துவதன்று; நல்லறிவுடைய நன்மக்களிடையடங்கி யொழுகி யவர் சொற்சுருங்க நவிலு மரும்பொருட் பகுதிகளை யுளங்கொளப் பலகாற் பழகி யறிதலானும், அவரது நலங்கெழுமொழுக்கங் களைத் தழுவி யொழுகுதலானும், விழுமிய நூற்பொருள் களை அறிவு நுணுகி யாழ்ந்தாராய் தலானும், அங்ஙன மாராய்ந்தவற்றைப் பிறருவக்கும் வகையாற் பொலிவு தோன்ற முகமலர்ந் தினியவாகச் சொல்லு தலானுமே யெய்துவதாம். இனிப் பொறாமையுடையார் தாமின்புறுவ தெல்லாம் பிறரிடைக் காணப்படுங் குற்ற மொன்றானேயாம். பொறாமை யுடைய ஒரு புலவரிடத் தொருவன் சென்று பிறரொருவர் நூலை வியந்து சொல்ல, அக்கணத்தின் அவர் முகங்கரு கி யழுங்குதலும், அந்நூலிலுள்ள சில குறைகளைக் காட்டவவர் முகமலர்ந்து மகிழ்தலு மறியவல்லார்க்குப் பொறாமை யுடையாரெய்து மின்ப மெல்லாம் பிறரிடைக் கண்ட குறைவுபற்றியேயா மென்பது இனிது விளங்கும். இங்ஙன மிழிக்கப்படும் பொறாமைக் குணமுடையார்க்கு ஒரு நூற் பொரு ளினிது விளங்காமை யானும், அப்பொருள் சிறந்து காட்டாமையானும் அவர் நூலாராய்ச்சி செய்தற்குரிய ரல்லர். அவராராய்ச்சி யறிவுடையோரால் வேண்டப்படுவதூஉமன்று.

இனிப் புகழ்கருதி நூலாராய்வார் தம்மை மிக்க கல்வியுடையாரென்றும் புலமையுடையா ரென்றும் பிறரறிந்து புகழும் பொருட்டு ஏனைப் புலவர் நூல்களிற் குற்ற மாராய்ந்து கூறுவர். இவர் புலவர் பிறர்க்குவரும் புகழெல்லாந் தமக்கே வரல் வேண்டுமெனத் தன்னலங் கொண்டு பிறர் நலன் நோக்காமையின், பிற ஆசிரியரிடத்து வியந்து கொள்ளப்படும் நலம்படு பொருட் கூறுபாடுக ளெல்லாம் இருண்முழைஞ்சிற் புகுத்தித் தாழிட்டு அவரிடத்திருந்த வழுவிய பொருள்களை வேறுபிரித் தெடுத்துக் கொணர்ந்து துளங்கொளிப் பகலில் விளங்கக் காட்டி யின்புறுவாராகலா னவரதாராய்ச்சியுங் காள்ளற் பாற்றன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/51&oldid=1587158" இலிருந்து மீள்விக்கப்பட்டது