உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

19

னிப் பகைமையாற் பொருளாராய்வர், பிறர்க்குந் தமக்குமொரு காலத் தொருகாரணம்பற்றி யொருபகைமை நிகழ, அதனைத் தம்மகத்திற் கரந்து வைத்துச் சமயம் வாய்த்துழி யவர்நூலிற் குற்றங்காணுது மென்று புகுந்து, குற்றமல்லாத வற்றையும் குற்றமென விகழ்ந்துரைத்துத் தம் பகைமை வெளிப்படுப்பர். ஒரு புலவர் ஒரு நூலியற்றினாராயின் அவர் தமக்குப் பகைவராயினும், அவரது நூலளவிற் பகைமை கொள்ளாது, அந்நூலிலுள்ள நலங் குறை யிரண்டனையும் ஒருங்கா ராய்ந்து நலங் கைக்கொண்டு குறைவினை விடுத்து நடுவு நிற்பார் தாம் அறிவின் மாட்சியுடையார். இந்நெறி கடந்து பொருளா ராய்வார் திறங்க ளெல்லாம் போலியா யொழி தலின், அவையு மறிவுடை யோராற் கொள்ளப்படா.

இனி, யிம்முத்திறத்தாரு மொழிய வேறுவகையானா ராய்ச்சி செய்வாரு முளர். அவர் நட்பின் மிகுதி கொண்டு நூலாராய்வாரும் செந்தமிழ் மொழியிற் றமக்குள்ள அன்பின் பெருக்கால் அம்மொழிச் சிறப்பினைப் போற்றிக் கோடற் பொருட்டு நூலாராய்வாருமாம். அவருண் முன்னை யார் தம்முயிரனைய நண்பரெழுதிய நூலிற் குற்றமுள வாயினு மவற்றைப் பாராது குணஞ் சிறியவாயினும் அவை தம்மைப் பெரிதெடுத்துப் புகழ்ந்து கூறுவா ராதலானும், பின்னை யாருள் ஒரு சாரார் பழைய தமிழ் நூல்களே சிறந்தன; பிற் காலத் தாராலியற்றப்படுவன வெல்லாம் மறுக்கிளர்ந்து நெறிப் படாதனவா மென்று கூறுதலானும், பிறிதொரு சாரார் செந்தமிழ் மொழிக்குச் சிறுமையாமாதலாற் பிற்காலத்தார் நூல்களிற் குற்றமாராய்ந்து அவற்றைத் தூய்மை செய்வா மெனக் கொண்டு அவ்வாறு புரிதலானும் இவர்தாமும் உண்மை யாராய்ந்தா ரல்லரென விடுக்க. இவர் தொல்லாசிரிய ரென்றவர் நூலிற் குற்றங்காணா தொழிதலும், இவர் புதுவரென் றவர்நூலிற் குணங்காணா தொழிதலும் உண்மையாராய்ச்சி செய்வார்க்கு ஏலாதனவாமென்பது கடைப்பிடிக்க. இதுபற்றி யன்றே திருவருட் பெருஞ் செல்வராய் விளங்கிய உமாபதி சிவனார்,

“தொன்மையவா மெனுமெவையு நன்றாகா வின்று

தோன்றியநூ லெனுமெவையுந் தீதாகா துணிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/52&oldid=1587159" இலிருந்து மீள்விக்கப்பட்டது