உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மறைமலையம் – 21

நன்மையினார் நலங்கொண்மணி பொதியுமதன் களங்க

நவையாகா வெனவுண்மை நயந்திடுவர் நடுவாந் தன்மையினார் பழமையழ காராய்ந்து தரிப்பர்

தவறுநலம் பொருளின்கட் சார்வாராய்ந் தறித லின்மையினார் பலர்புகழி லேத்துவரே திலருற்

றிகழ்ந்தனரே லிகழ்ந்திடுவர் தமக்கெனவொன் றிலரே”.

என்று திருவாய் மலர்ந்தருளுவா ராயின ரென்பதூஉ மென்க. ஈண்டெடுத்துக் கூறிய இவ்விருவேறு திறத்தாரும் மிகச் சிலராதலால், ஆராய்ச்சி செய்தற்குரிய ரல்லாரென யாம் பகுத்தெடுத்துக் கொண்ட முத்திறவரு ளடக்காது வேறு கூறினாம். அல்லதூஉம் இவ்விரு திறத்தாரும் அம்மூவரைப் போல் தீய கருத்தானாராயாமை யானும் வேறு சொல்லப் பட்டன ரென்றுணர்க. து கிடக்க.

இனி நடுநின்றுள்ளவா ராய்ச்சிசெய்வா ரினையராதல் வேண்டுமென்ப துடன்பாட்டானு மொருசிறிது காட்டுதும். இவர் பரந்த நுண்ணுணர்வும் பரந்தநூலுணர்வும் கருணையும் பாறையும் சீலமுமுடையவராய் உலகிற் குதவியாற்றுத லொன்றனையே குறிக் கொண்டு தாமாராய்தற் கெடுத்து கொள்வது தொல்லாசிரியர் நூலாயின், அதனுட்பொதிந்து கிடக்கும் அரிய மறைபொரு ணுட்பங்களை யாழவாராய்ந் தடுத்தெடுத்து அறிவுடையோர் பலருங் கழியுவகை கொண்டு வியக்குமாறு பாகுபடுத் தமைத்து இனிது விளக்கிப் பின்வழுக்க ளுளவாயின் அவற்றையு மெடுத்துக் காட்டிப் பின்னவ் வழுக்களைக் காரணஞ் சொற்றொறும் விளங்க அமைத்து முடித்தலும், பிற்காலத்தார் நூலாயின் அவைதம்முட் கிடந்த நலங்களையும் முழு மணி பொறுக்கிப் பதப்பொற் றகட்டிற் குயிற்றிப் பொலி வடையச் செய்தல் போற் றிறம்படக் காட்டி, வழுக்க ளுளவாயின் அவற்றை ஆக்கியோர்க்கு எவ்வாறு எடுத்துக் கூறினா லவர் மனம் வருந்தா ரென்று தெரியுமோ அவ்வாறெல்லாம் நயம்பட இன்சொற்களாலினிது விளக்கி யவரையு மவர் நூலையுந் திருத்திப் பெருக்கி, இங்ஙனஞ் செய்வுழி யெல்லாம் அவ்வாக்கியோரினும் தம் புலமை சிறிதென்பது குறிப்பானும் வெளிப்படையானும் புலப்படுத்தி யுலகிற் குதவுதலை மேற்கொண்டொழுகற்பாலார். இங்ஙன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/53&oldid=1587160" இலிருந்து மீள்விக்கப்பட்டது