உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம் செய்தலாலுலகம்

21

மாராய்ச்சி பயனெய்தத் தமக்குப் பெரும்புகழ் வருதலல்லாமலும், பிற்காலத்துப் புலவரும் நூலெழுதுதற் கண் மனவெழுச்சி மிக்கு அரும்பெறனூல் பலவியற்றி நலம் பெருக்குவர். இவ்வாறன்றி யொருவர் நூலிற் குற்றமே யாராய்தல் அவர் மனவெழுச்சி களைந்து உலகிற்குத் தீங்கு பயப்பதாமன்றி வேறென்னை?" அரியகற் றாசாற்றர் கண்ணுந் தெரியுங்கா லின்மை யரிதே வெளிறு” என்னுந் திருவாக் குண்மை யறிய வல்லார்க்கு முழுமுதற்பெருங் கடவுளாகிய சிவபெருமானையும் அவனருள் வழிப்பட்ட மெய்யடியாரையு மொழித்து ஒழிந்த சிற்றுயிர்க ளெல்லாங் குற்றஞ்செறிந்த புல்லிய வியற்கையுடையனவயா மென்ப தினிது புலப்படும். இதுபற்றியன்றே ஆங்கிலநூலுள்ளும் (Dryden) திரைடன் என்னு நல்லிசைப் புலவர் ‘பிழைகள் உள்ளீடில்லாத துரும்பைப்போல மேன்மிதக்கு மாதலால் அரிய மணிமுத்து வேண்டுவார் உள்ளுருவி நுழைந்து துருவுக என்றதூஉம், அடிசன் (Addison) என்னுமாசிரியர் ஒரு நூலிலுள்ள நலங்களையே பெரிது மாராய்ந்து அமைத்து வழுவிய பொருள்களை யாராயாது விடுதல் தலைமையாம்.' என்றும் வழுவாராய்ந்த விடத்தும் அத்தன்மை களைந் ததனை யாக்கிக் கோடல் நூலாராய் வார்க்குக் கடமையா' மென்றுங் கூறியதூஉ மென்க. இன்னு மிதனை விளக்குதற்குக் கிரேக்க ரென்னு நன்மக்களிடத்து வழங்கும் ஒரு பழங்கதையினை இங்கெடுத்துக் காட்டுதும்;-நூலாராய்வாரொருவர் ஒரு புலவரெழுதிய நூலிற் கிடந்த குற்றங்களை அரிதினாராய்ந்து அவை தம்மைத் தொகுத்து அழகிய ‘அப்பாலோ' (Appolo) என்னுங் கடவுளுக்கு அடியுறை கொடுப்ப, அதனைப் பெற்றுக் கொண்ட அக்கடவுள் குற்றிய நெற்பொதி யொன்றை யவருக்கு ஈந்து ‘இம்மழுக் கலிலுள்ள முழு வெள்ளரிசியையும் உமி தவிட்டினையும் வேறு பிரித்து ஒருபுற மிடுக' என்று பணித்தனர்; அக்கட்டளைப் படியே மிகமுயன்று செய்து அவரதனை யக்கடவுளுக்குத் தெரிவித்தலும் அவர் அந்நூலாராய்வார்க்கு உமி தவிட்டை யீந்து உனக்கு விருப்பமாவ திவையென்பது நீ தந்த அடியுறையாலியாம் அறிந்துகொண்டமையி னிவற்றை எடுத்துச் செல்க' வென விடுத்தனர். இதனாற் குற்றமே யாராய்வார் பெறும் பயனினிது அறிவுறுக்கப்படுதலின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/54&oldid=1587161" இலிருந்து மீள்விக்கப்பட்டது