உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மறைமலையம் – 21

அவை தம்மை ஒருதலையான் நீக்கி நலங்கொளலே சிறந்த தென்றுணர்க.இது கிடக்க.

இனியிக்காலத்தி லிச்செந்தமிழ் நாட்டில் ஒருசில போலிப் புலவன்மார் தொல்லாசிரியரா லியற்றப்படுவனதாம்

நூல்கள்; அவைதாம் வழுவில; பிற்காலத்தாராற்

செய்யப்படுவன வெல்லாம் மறுப் பொதிந்தனவா மெனக் கூறுவாரும், புதிய நூல்களி

L

னல்லாங் குற்றமே யாராய்துமெனத் திரிகுவாரும், ஒருவரிடத்துச் சிறந்த வொழுக்கமும் உயர்ந்த நூற்புலமையுங் காணி னெம்முளம் பொறா தென்றவரிடத்துப் பகைமை கொண்டு அவர்நூலிற் குற்றங்கண் டுரைப்பா மெனமடிதற்று நிற்பாரும், ஒருவர் புகழொளித்திகழ்குன்றின் குவட்டினின்று பொற்புற்று விளங்க யாம் இழிவுறு படுகரிற் கிடந்து பருவரலெய்துமோ வென்று மற்றவர்மே லிகழுரைப் பகழி சிந்திக் கலாம்விளைத் துழிதருவாருமாய்ப் பலவேறுபட்டுச் சிதர்ந்து போயினர். இவரிங்ஙனந் தம்முளே பெரிது மிகலி யொழுகுதலாற் கல்வி வளஞ் சுருங்கிச் செந்தமிழ்த் தென்னாடு திருத்தமுறாது பாலிவு குன்றிப்போம். அந்தோ! அந்தோ! இவர் தன்மையிருந்தவாறு இரங்கத்தக்க தொன்றாம். இதனா லிவரடைவதூஉம் பெருங்கேடன்றிப் பிறிது படுவதின்று. அருந் தமிழ்ப் புலவீர்! இப்பொருந்தாச் செயலொழிமின்! புகழ் பொருண் முதலியவற்றை ஒருசிறிதும் பாராது நீவிரீட்டும் பொருளளவி னுள்ளந் திருந்தி நிரம்ப வுவந்து பிற மக்களுக்கு நும்மா லியன்றவாறுதவி புரிந்து ஒழுகுதலைக் கடப்பாடாகக் கொள்ளுமின்! எதிலார் புகழ் பொருளெய்திக் களித்து வாழ்தலைக் கண்டு நீவிரு மவரோ டளவளாய்க் களிமின்! பண்டைக் காலத்திருந்த பரணர், கபிலர், பெருஞ்சித்திரனார் முதலிய புலவரைப்போற் கெளரவமாக நன்னெறிச் சென்மின்! யாமிவை கூறியதுபற்றி எம்மீது வெகுளன்மின்! நிற்க.

னி

இனி நூலாராய்வாரிய லிவ்வாறெல்லா மொருபுற மமைந்து கிடப்ப அவை தம்முள் ஒன்றுதானு மறிந்து கொள்ளும் மதுகையிலராகிய ஒருசில போலிப் புலவன்மார் யாமியற்றிய சோமசுந்தரக் காஞ்சியிற் குற்ற மாராய்துமெனப் புகுந்து, பகைமை அழுக்காறு முதலிய விழிகுண வயத்தா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/55&oldid=1587162" இலிருந்து மீள்விக்கப்பட்டது