உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மறைமலையம் – 21

வேண்டு மென்பதூஉம், மன்னைக்காஞ்சியும் ஆண்பாற் கையறு நிலையுந் தம்முள் வேறு பாடுடைமையினது பற்றி வேறு வேறுபெயர் கொடுத்துரைக்கப்படு மென்பதூஉம், அகம்புற மென்னும் பொருட்கூறுபாடு மவற்றி னிலக்கணமு மறியாது "சடையா யெனுமால்” என்னுந் தெய்வத் திருப்பதிகம் அகத்திணைப் பொருண்மைத் தென்று குழறல் அறிவொடு படாப் புன்மொழி மாக்க ழுக்குரையேயா மென்பதூஉம், அத்திருப்பதிகத்தைத் தேவ பாடாண்டிணையில் விராய்வந்த காஞ்சித்திணைத் தாபதநிலையின் பாற்படுத்துரைத்துக்கோடல் வேண்டு மென்பதூஉம், ஆனந்தக் குற்றமென வொன்று தொல்காப்பியனாரை யுள்ளிட்ட முதுதவத் தொல்லாசிரியன் மாரோதாமையினதனைப் பிற்காலத்தார் கூறினு மறிவுடையார் கொள்ளா ரென்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் வரம்

-

பறுத் துரைக்கு முரையே சான்றா மென்பதூஉம், பிற்காலத்திற் பேரறிவினராய் விளங்கிய ஆசிரியர் சிவஞானயோகிகள் முதலா யி னாரு மதனைத் தழீஇயினா ரல்ல ரென்பதூஉம், அன்றிப் பிற்காலத்தா ரியற்றிய நூல்பற்றியே யங்ஙன மொன்று கோடுமாயினுஞ் சைவம்’ என்னு மங்கலமொழி ஒரு வாற்றானும் அவ்வானந்தக் குற்றமுடையதாவான் செல்லாமை யின் அதுதானு முணராது அப்போலிப் புலவர் குற்றஞ் சொல்லப் புகுந்தது நகையாடற்பாலதா மென்பதூஉம், ‘சைவம்’ என்னுஞ் சொல் அடையடாது நின்ற வழியெல்லாஞ். 'சித்தாந்த சைவத்' தினையே யுணர்த்துமா றறியாது அச்சொல்லைத் தொலைத்து விடல் வேண்டுமெனக் கூறுவார் சித்தாந்த சைவத்திற்குப் புறம்பாவ ரென்பதூஉம், அப்போலிப் புலவர் செய்யுட் கடோறுஞ் சொல்லிய குற்றங்கள் அவரறியாமையானும் அறிவு மயக்கமுறுதலானுங் கொண்டு குழறியனவா மென்பதூஉம் பிறவும் நன்று விளக்கி நிறுவப் பட்டன. இவ்வெதிர் மறுப்புச் செந்தமிழாராய்வார் பலர்க்கும் பயன்படுதல் வேண்டி ‘ஒன்றின முடித்த றன்னின முடித்தல்’ என்னு முத்தி வகையால் இடையிடையே நுண்பொருள் பலவும் புகுத்தி விளக்கமாகவுஞ்சுருக்கமாகவுஞ் சிவபெருமான் றிருவருள் வழிநின் றியன்றவளவு எழுதியமைத்தாம்.

அடிக்குறிப்புகள்

1 Dryden.

2. Addison

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/87&oldid=1587194" இலிருந்து மீள்விக்கப்பட்டது